அண்டார்டிகாவில் பனிப்படலம் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிப்பு : விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!!

Read Time:1 Minute, 54 Second

அண்டார்டிகா கண்டத்தினுடைய பனிப்படலம் உருகும் வேகம் முன் இருந்ததை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் கடந்த சில ஆண்டுகளாக உருகி வருகிறது. கடந்த 1992-ம் ஆண்டு முதல் 3 ட்ரில்லியன் டன் பனி உருகியுள்ளதாக தெரிவித்துள்ள ஆராய்சியாளர்கள் இதனால் கடல் மட்டம் உயரவும், கடற்கரையோர பகுதிகள் கடும் பாதிப்படையவும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் 3 ட்ரில்லியன் டன் பனியின், ஐந்தில் இருமடங்கானது கடந்த 5 ஆண்டுகளிலேயே உருகியுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது உலக வெப்ப மயமாதலை கட்டுப்படுத்த விடுக்கப்பட்டுள்ள மற்றுமொறு எச்சரிக்கை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 76 பில்லியன் டன் பனி உருகி வந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு 219 பில்லியன் என பனி உருகும் அளவு மும்மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழிற்சாலைகள் வெளியிடும் வெப்பத்தின் அளவு இதே நிலையில் நீடிக்கும் பட்சத்தில் இந்த நூற்றாண்டு முடிவில் அங்குள்ள பனி மொத்தமும் உருகலாம் என அஞ்சப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓத்தா தமிழிசை தேவிடியா முண்டா எத்தனை பேருகூட படுத்த தேவிடியா நீ | பச்சையாக கேட்ட பெண்!!(வீடியோ)
Next post தூக்கம் ஏன் அவசியம்?(மருத்துவம்)