எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல் : கவுதமாலா விமான நிலையம் மூடல்!!( உலக செய்தி)

Read Time:1 Minute, 39 Second

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை சில நாட்களுக்கு முன் வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த எரிமலை வெடித்து சுமார் 10 கிலோ மீட்டர் உயரம் வரை வானத்தில் பரவியது. எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். முதலில் 8 கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்த இந்த எரிமலை குழம்புகள் போக போக பல கிலோ மீட்டர் தூரம் வரை ஆக்கிரமித்தது.

பலர் பலியான நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருநங்கைகள் குறித்த ஆய்வின் உண்மைகள்(வீடியோ)
Next post வட கொரியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா!!(உலக செய்தி)