பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?(அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 14 Second

சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.

காதல் கைகூடாமல் வேறு மண மகனை மணக்க நோடும் பல பெண்களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷய மாக மாறி விடுகிறது. காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந்திருந்தால் அந்தப் பெண்களால், கணவனுடன் அந்தரங் கமான உறவில் ஈடுபட முடிவதில்லை.

செக்ஸைப் பற்றிப் பேசவும், அதில் தனது தேவைகளை வெளிப்படுத்தவும் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றொரு அபிப்ராயம் உண்டு. எங்கே தனது தேவை களைப் பற்றிப் பேசினால் தன்னைத் தன் கணவன் மட்டமாக நினைத்து விடுவானோ என்ற பயமே பல பெண்களுக்கு வெறுப்பாக மாறி விடுகிறது.

சிறு வயதில் செக்ஸ் கொடுமைகளுக்கும், துஷபிரயோகங் களுக்கும் உட்படுத்தப்படும் பெண்களுக்கு பெரியவர்களானதும், அதைப்பற்றி முழுமையாகத் தெரிய வரும்போது அந்த விஷயமே வெறுக்கத் தக்கதாக மாறி விடுகிறது.

உடல்நலக் கோளாறுகளும் பெண்களின் வெறுப்பிற்கு முக்கிய காரணம். அளவுக்கதிக உதிரப்போக்கு, வெள்ளைப் போக்கு, பிறப்புறுப்பு துர்நாற்றம், அரிப்பு போன்ற பல பிரச்சினைகளால் இன்பமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவு பல பெண்களுக்குத் துன்பமாக மாறி விடுகிறது.

கணவனின் முரட்டுத்தனச் செயல்களுக்கு இணங்கக் கட்டாயப்படுத்தப்படும் பெண்களுக்கும் செக்ஸில் வெறுப்பே மிஞ்சுகிறது.

பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் குறைய கணவரது உடல்நலக் கோளாறுகளும் முக் கிய காரணம்.

குழந்தை பெற்றதுமோ, குறிப்பிட்ட வயதை அடைந்ததுமோ அல்லது மெனோபாஸ் காலக்கட்டத்திற்கு வந்ததுமோ பல பெண்கள் தமக்கு வயதாகி விட்டதாக நினைத்துக் கொள் கிறார்கள். அதன்பிறகு தனக்கு செக்ஸெல்லாம் அனாவசிய விஷயம் என்று அதை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள்.

செக்ஸ் என்கிற விஷயம் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைத் தரும். அப்படியிருக்கையில் மற்ற பெண்களது செக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் சொல்கிற விஷயங்கள் சில பயங்கரமானதாக இருக்கக் கூடும். அதைக்கேட்டு விட்டு, செக்ஸில் அனுபவமே இல்லாத பெண்களுக்கு தனக் கும் அப்படித்தான் நேரப் போகிறது என்ற திகிலுணர்வு மனத்திற்குள் பதிந்து விடும். அதனால் செக்ஸ் என்றாலே பயத்திற்கும், வெறுப்பிற்குமுரிய விஷயம் என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

மனம் அமைதியாக இல்லாதபோது உடலும் ஒத்துழைக் காது. பெண்களுக்கு வீட்டில், வெளியிடங்களில் எனப் பல இடங்களில், பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படி யாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் !!(சினிமா செய்தி)
Next post உலகின் அழகான ஆபத்துகள் .!(வீடியோ)