எந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 23 Second

ஆபீஸில் கேஷுவல் லீவு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்… ஆனால் கேஷுவல் செக்ஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா, கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதில் மாஸ்டராவது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா.. தெரிஞ்சுக்கனும்னா கொஞ்சம் தொடர்ந்து படியுங்க..

அதாவது எந்தவிதமான கமிட்மென்ட்டுகளும் இல்லாமல் வெறும் செக்ஸை மட்டுமே பிரதானமாகக் கொண்டு உறவு வைத்துக் கொள்வதுதான் இந்த கேஷுவல் செக்ஸ். கல்யாணம் பண்ணிக்கனும், குடும்பம் நடத்தனும், பிள்ளை குட்டி பெத்துக்கனும் என்று எந்தவிதமான கமிட்மென்ட்டும் இதற்குத் தேவையில்லை. வெறும் செக்ஸுக்காக மட்டுமே பழகுவதுதான் இதன் முக்கிய நோக்கம் பிளஸ் ஒரே நோக்கம்.

இதை இப்போது பலரும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இது ஜாலியானது மட்டுமல்லாமல், எந்தவிதமான நிர்ப்பந்தமும் இதில் இல்லை என்பதால் பலர் இப்போது இப்படித்தான் வாழ ஆரம்பித்துள்ளனர்.

சரி அதை விடுங்க.. நீங்க கேஷுவல் செக்ஸில் கில்லாடியாக திகழ் சில யோசனைகள்…

நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் கேஷுவல் செக்ஸில் ஈடுபடலாம். ஆனால் முன்கூட்டியே உங்களது எல்லையை திட்டமிட்டு தெளிவாக சொல்லி விடுங்கள்.

இப்படிப்பட்ட உறவில் ஈடுபடும்போது இருவருமே சவுகரியமாக உணர வேண்டியது அவசியம். அப்போதுதான் உறவில் எந்தவிதமான நிர்ப்பந்தமும் இல்லாமல் ஈடுபட முடியும். இருவருமே எந்தவிதமான ஈகோவும், தயக்கமும் இல்லாமல் இதில் ஈடுபட்டால்தான் உறவு நீடிக்க முடியும். மேலும் இருவரில் ஒருவருக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டால் கண்டிப்பாக தவிர்த்திடுங்கள்.

உணர்ச்சிவசப்படுவதற்கு இங்கு வேலையே கிடையாது. காரணம், இது எந்தவிதமான நிர்ப்பந்தமும் இல்லாத உறவு என்பதால். தேவைன்னா சேர்ந்துக்கலாம். தேவையில்லாட்டி விலகிக்கலாம். கேஷுவல் செக்ஸ் என்பதற்கு இவ்வளவு நாள்தான் என்று கால நிர்ணயம் எல்லாம் இல்லை. சிலர் ஒரு வாரத்திற்கு தொடர்பு வைத்துக் கொள்வார்கள். சிலருக்கு இது ஒரு மாதமாக இருக்கலாம். சிலருக்கு ஒரு வருடம் கூட இருக்கலாம். ஆனால் நீண்ட கால உறவுக்கு இது லாயக்குப்படாது.

மேலும் இப்படிப்பட்ட உறவில் ஈடுபடுவதற்கு முன்பே, இங்க பாருப்பா, வெறும் செக்ஸுக்காக மட்டும்தான் நாம் சேருகிறோம், வேறு எந்த நோக்கமும் இல்லை, உணர்ச்சிவசப்பட்டு நீதான் என்னைக் கட்டிக்கணும் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்று முதலிலேயே இருவரும் தெளிவாக பேசி முடிவெடுத்து விட்டு படுக்கைக்கு்ப் பாயுங்கள்.

கேஷுவல் செக்ஸில் ஈடுபடும் ஒவ்வொருவரும் பாதுகாப்பான உறவை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆணுறைகளை கண்டிப்பாக ப்ரீப்கேஸ் அல்லது கைப்பையில் எப்போதும் வைத்திருங்கள். பிறகு எஸ்டிடி வந்து விட்டது, பிசிஓ வந்து விட்டது என்று அலறக் கூடாது.

இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கூட கவனமாக, பார்த்துப் பார்த்து செயல்பட்டால் நீங்களும் இதில் ‘மாஸ்டர்’தான்…!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாகம்!!(கட்டுரை)
Next post பிரசவத்துக்கு கெளம்பலாமா?!(மகளிர் பக்கம்)