உறவிற்குப் பின் தவிர்க்க வேண்டியவை…!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 6 Second

சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்று சொன்னாலும், படுக்கையில் தெரிந்து கொள்வதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில், தாம்பத்திய உறவுக்கு பின் தவிர்க்க சில செயல்களை பார்ப்போமா..

உடனே தூங்காதீர்

செக்ஸ் உறவு முடிந்தத உடனேயே தம்பதியர் இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ உடனே தூங்கிவிடாதீர்கள். இது தவறறான அணுகுமுறையாகும். ஏனெனில் உங்களுக்கிடையேயான தாம்பத்யம் எவ்வாறு இருந்தது என்பதை சிந்திக்க முடியாமல் போய்விடும். இது தாம்பத்திய உறவின் வசீகரத்தை கொன்றுவிடும் என்பதை முதலில் உணருங்கள்

வேலை அல்லது படிப்பில் ஆழ்வது கூடாது

பல தம்பதிகள் உறவு முடிந்தப் பின் பின் வேலை அல்லது படிப்பைக் கவனிக்கப் போய்விடுவார்கள். காரணம் தாம்பத்திய உறவின் போதும் அவர்களின் மனதை வேலை அல்லது படிப்பு தான் ஆக்கிரமித்திருக்கிறது. எப்படி வேலையின் போது செக்ஸ் எண்ணங்கள் மனதில் அலைபாய்வது தவறோ, அதே போல தான் உறவின் போது படிப்போ, வேலையோ இடையே வருவதை தவிர்க்க வேண்டும்.

தனித்தனியே எதற்கு தூக்கம் ?

தம்பதியரிடையே தனித்தனியாக படுக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் அநது ‘அன்றைய’ நாளிலும் இருக்க வேண்டுமா என்ன? காம வித்தை புரிந்த அந்த இரவிலும் உடனே தனியாக தூங்கச் செல்வது நல்ல முறையல்ல. அன்றைய இரவின் அழகான சூழ்நிலையைக் கெடுப்பது மட்டுமல்லாது. தொடர்ந்து வரும் இரவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உறவில் சாப்பிட்டது போதும்

உறவிற்கு பின் சாப்பிடுவது மிகவும் மோசமான விஷயமாகும். உங்களுக்கு உடல் பசியை விட குடல் பசி தான் பெரியது என்றும் உறவின் போது நிச்சயமாக நீங்கள் உங்கள் வயிற்றை
பற்றிதான் சிந்தித்து இருப்பீர்கள் என்று உங்கள் துணையை தவறாக நினைக்க வைத்து விடும்.

உடனடி குளியல் வேண்டாம்

உறவிற்குப் பின் குளித்து உடலை தூய்மைப் படுத்திக்கொள்வது நல்லதுதான். அதுவும் இருவரும் ஒன்றாக எனில் கூடுதல் சுகம். ஆனால் உடனே குளியலறை நோக்கி ஓட தேவையில்லை .வேலை முடிந்து விட்டது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் துணை இன்னும் அந்த மன நிலையில் இருக்கலாம், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். உடனே குளியலறை நோக்கி ஓடினால், ஏதோ தவறு போல என்றும் துணையை எண்ண வைக்கக்கூடும்.

குழந்தைகளை அழைத்துக் கொள்வது

அந்தரங்கச் சூழலில்அடுத்தவரை ஊடுருவ விடுவது, அந்தச் சந்தோசத்தின் முழுமையைச் சிதைத்து விடும். அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. உறவு நேரத்திற்குப் பின் குழந்தைகளை அழைத்து உடன் படுக்க வைத்துக்கொள்ளுவது துடிப்பு, இயல்பாகவே பெண்களுக்கு அதிகம். இன்னும் “ரொமாண்டிக் மூடில்”இருந்து மாறாத கணவனுக்கு அது ஏமாற்றத்தைத் தரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீண்ட அடர்த்தியான முடி வளரச்செய்யும் வீட்டு வைத்தியம்!!(வீடியோ)
Next post அரபு நாடுகள் ஓரம் கட்டியதால் அமெரிக்காவின் நட்பை பெற கோடிகளை கொட்டும் கத்தார் : டிரம்புக்கு நெருக்கமானவர்களுக்கு வலை!!