பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:5 Minute, 21 Second

ஆர்கஸம். இது செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் உள்ளது. பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்து முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.

ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும், மேலும், உறவின்போது இன்பம் அனுபவிப்பது அதிகரிப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம். முன்பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாகவும் இதை அனுபவித்த பெண்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பான சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில், 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் பல அதிசயிக்கதக்க மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர்.92 சதவீதம் பேருக்கு முன்பை விட அதிக அளவிலான இன்பம் செக்ஸ் உறவின்போது கிடைத்ததாக கூறியுள்ளனர்.

தாம்பத்ய உறவின்போது பெண்களுக்கு வசதியான பொசிஷனைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து துணைவர் கூறுகிறாரே என்பதற்காக தங்களுக்கு வசதியில்லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் திருப்தி இல்லாத பொசிஷினில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மன ரீதியாக இறுக்கமாக்கி, ஆர்கஸம் வராமல் செய்து விடும்.

ஆர்கஸம் வருவதில் சிரமம் உள்ளவர்கள் வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது இன்பத்தைத் தூண்ட பயன்படும். இயல்பான உறவின் மூலம் முழுமையான இன்பத்தை, ஆர்கஸத்தை அனுபவிக்க முடியாத நிலை வரும்போது ஆர்கஸத்தை ஏற்படுத்துவதற்காக வைப்ரேட்டரை பயன்படுத்தலாம். இருப்பினும் இது உங்களது கணவரின் மனதைப் பாதிக்காத வகையில் இருப்பது அவசியம்.

உறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மனதை நிரப்பிக் கொள்ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றதுதான்.உணர்வுகளைத் தூண்டவும், தாம்பத்ய ரீதியான உணர்வு வருவதற்காகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது, வீடியோ பார்ப்பதுபோன்றவற்றை மேற்கொள்வதில் தவறில்லை. அதேசமயம், உங்களது உணர்வை தயார் செய்ய ஒரு கருவிதான் இவைகள்.அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்க கூடாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

உறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருப்பது அவசியம். உங்களது பேச்சில் செக்ஸ் வாசனை தூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இருவரும் மனரீதியாக, உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படுமாறு உங்களது பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் உங்களுக்கு சந்தேகமா என்ன…?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் !!(சினிமா செய்தி)
Next post பைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு!!(மகளிர் பக்கம்)