பெற்றோருக்கு கூறாமல் தலதா மாளிகைக்கு துக்கத்தை கூற சென்ற மாணவன்!!

Read Time:1 Minute, 44 Second

பாடசாலை முடிந்த பின்னர் பின்னேர வகுப்புக்கு செல்வதாக கூறிக் கொண்டு சென்று காணாமல் போயிருந்த கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் மஹியங்கனை பஸ் நிலைத்தில் வைத்து இன்று (05) பகல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிராந்துருகோட்டை பிரதேசத்தின் முன்னணி பாடசாலை ஒன்றில் தரம் 08ல் கற்கும் 13 வயதுடைய மாணவர் ஒருவரே காணாமல் போயிருந்தார்.

பெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பின்னேர வகுப்புக்குச் செல்வதாக கூறிவிட்டு கண்டி தலதா மாளிகைக்கு சென்று துக்கத்தை கூறி வழிபட்டதாக மாணவர் கூறியுள்ளார்.

இரவு நேரம் தலதா மாளிகைக்கு அருகில் தங்கியிருந்துவிட்டு மஹியங்களை நோக்கி வந்ததாகவும், பின்னேர வகுப்புக்கு வழங்கப்பட்ட பணத்தை தனது போக்குவரத்து செலவுக்கு உபயோகித்ததாகவும் மாணவன் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.

மாணவரின் பெற்றோரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் படி பொலிஸார் பிரதேசவாசிகளுடன் இணைந்து மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போன குறித்த மாணவன் மீட்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொலைக் குற்றவாளியான பெண்ணுக்கு மரண தண்டனை!!
Next post விஸ்வரூபம்-2 படத்துக்கும் தடை !!(சினிமா செய்தி)