கொலைக் குற்றவாளியான பெண்ணுக்கு மரண தண்டனை!!

Read Time:1 Minute, 51 Second

கொலை சம்பவம் ஒன்றில் 2013ம் ஆண்டு குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு இன்று மீண்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த முத்துசாமி சரஸ்வதி என்ற பெண்ணுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1995ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த அமரசிங்க என்ற நபரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக அந்தப் பெண்ணுக்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்குத் தொடரப்பட்டது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் 2013ம் ஆண்டு குறித்த பெண்ணை குற்றவாளியாக அறிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பின்னர் வௌிநாட்டில் தலைமறைவாகி இருந்த பெண் நாட்டுக்கு திரும்பியதையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி கடந்த 2013ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அமைவாக குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார்ன் சாலட் !!(மகளிர் பக்கம்)
Next post பெற்றோருக்கு கூறாமல் தலதா மாளிகைக்கு துக்கத்தை கூற சென்ற மாணவன்!!