கோடைக்கான தலைமுடி பராமரிப்பு!!(மகளிர் பக்கம்)
கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெளியில் தலைகாட்டவே முடியவில்லை என்னும் அளவுக்கு மக்கள் வெயிலின் தாக்கத்தால் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வெயிலில் பெரும்பாலும் உடல் உறுப்புகள் வியர்வையாலும், வறட்சியாலும் பாதிக்கப்படும். என்னதான் குளித்து முடித்து வெளியில் கிளம்பினாலும், கொஞ்சநேரத்தில் தலையில் வியர்த்து தலைமுடி பிசுபிசுத்து எரிச்சல் ஏற்படும். இந்த வெயில் காலத்தில் தலைமுடியைப் பாதுகாக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள் குறித்துச் சொல்கிறார் ஒப்பனை சருமவியல் நிபுணர் டாக்டர் சித்ரா வி.ஆனந்த்.
கோடைக் காலத்தில் உங்கள் தலைமுடிக்கு நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்…
உங்கள் சருமத்தைக் கோடைக் கால வெயில் கடுமையாகப் பாதிக்கலாம். ஈரப்பதக் காற்று தலைமுடியை உலர்த்தன்மையுடன் பிசுபிசுப்பாக்கும். எனவே ரசாயனம் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல் தலைமுடியை சில எளிய வழிகளில் பாதுகாக்கவும்.
சன் ஸ்மார்ட்டாக இருக்கவும்
உங்கள் தலைமுடிக்குப் புற ஊதாக் கதிர்கள் நல்லதல்ல. அதிக சூரிய வெப்பம் தலை முடியை உலர்த் தன்மையுடன், முனைகளை உடைத்து, ஒளிர்த் தன்மையை இழக்க வைக்கும்.
நன்றாக மூடி மறைத்துக் கொள்ளவும்
சூரியக் கதிர்கள் பாதிக்காமல் இருக்கத் தலையை துணி அல்லது தொப்பியால் நன்றாக மூடி மறைத்துக் கொள்ளவும். இது புற ஊதாக் கதிர்களிலிருந்து கூடுதல் பாதுகாப்பைத் தருவதுடன், ஈரப்பதத்தை இழக்காமல் தக்க வைக்கும். காற்றினால் தலை முடி கலைந்து சிக்கு பிடிக்காமலும், வண்ணச்சாயம் பூசியிருந்தால் நிறம் மங்காமலும் பாதுகாக்கும்.
நீந்துவதற்கு முன்பு தலை முடியை பின்னி தலை உறை அணிந்து கொள்ளவும்
நீச்சல் குளத்திலுள்ள தண்ணீரில் கலக்கப்படும் உப்பும், ரசாயனமும் உங்கள் தலைமுடியைப் பாதிக்கும். எனவே கோடைக் காலத்தில் தலை முடியை மிருதுவாக மென்மையாகப் பாதுகாக்கவும். நீந்துவதற்கு முன்பும், பின்பும் தலைமுடியைத் தண்ணீரில் அலசுவது நல்லது. தலைமுடி சிக்குப் பிடிக்காமல் இருக்கப் பின்னிக் கொண்டு தொப்பியை அணிந்து கொள்ளவும்.
தலைமுடியை ஏர் டிரை செய்து கொள்ளவும்
கோடைக் கால வெப்பமும் சூரியக் கதிர்களும் உங்கள் தலைமுடியைச் சேதப்படுத்தும். இதில் ப்ளோ டிரையர்களைத் தலைமுடிக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது முக்கியமானது. எனவே தலைமுடிக்கு ஏர் டிரையைப் பயன்படுத்தி கூந்தலை இயற்கை அலைபோல் ஆட விடுங்கள். முடிந்த வரை ஃப்ளாட் ஐயன் அல்லது கர்லிங்க் ஐயன் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
கூடுதல் ஒளிர்த்தன்மைக்கு சூடான எண்ணெயில் அலசவும்
தலை முடிக்குள் ஊடுருவிச் செல்வதால் தேங்காய், ஆலிவ், அவகடோ எண்ணெய் ஆகியவை உங்கள் தலையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். தலை முடியின் வேரிலிருந்து எண்ணெயைத் தேய்க்கவும். ஷாம்பூவால் மென்மை யாக அலசவும். தலைமுடியில் இருக்க வேண்டியது ஈரப்பதம், எண்ணெய்ப் பிசுக்கு அல்ல.
மாயிஸ்சர் சேர்த்துக் கொள்ளவும்
கோடைக் காலத்தில் லீவ் இன் கண்டிஷனர் பயன்படுத்த மகத்தான வாய்ப்பாகும். சருமத்துக்கு லோஷன் போன்று இது உங்கள் தலைமுடிக்கு ஈரப்பதத்தைச் சேர்க்கவும். இது தலைமுடி சிக்குப் பிடிக்காமல் பாதுகாப்பதுடன் சுருள் முடிக்கும் வழிவகுக்கும். மேற்கண்ட ஆலோசனைகளுடன் ஆரோக்கிய உணவுக் கட்டுப்பாடு கோடைக் காலத்தை இன்னும் குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் வைத்திருக்கும். கோடைக் காலத்தில் ஏராளமான புத்துணர்ச்சி தரும் சுவையான ஆரோக்கியமான உணவுகளும் உள்ளன. எனவே உங்கள் உடல் நலத்துக்கு ஏற்ற வகையில் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். நிறைவாகக் கோடையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்!
Average Rating