நலம்… நம் பக்கம்!!
ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்போதுதான் சர்க்கரை நோய் வருகிறது. இன்றைய நிலவரப்படி சீனாவுக்கு அடுத்தது இந்தியாதான் சர்க்கரை நோயால் அதிக பாதிப்பு அடைந்து உள்ளது. இதற்கு காரணம் நாம் சரியான உணவுமுறையை கடைப்பிடிக்காமல் இருப்பதுதான். சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத சில அடிப்படையான நடைமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் எந்நாளும் நலம் நம் பக்கம்…
சர்க்கரை நோய் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டியவை
*நேரத்துக்கு உணவு உட்கொள்ள வேண்டும்.
*அளவாக உண்பது அவசியம்.
உணவின் அளவு அதிகமாகும்போது ரத்த சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.
*ஒவ்வொரு 2 அல்லது 3 மணி நேர இடைவேளையிலும் சாப்பிடவும்.
*தண்ணீர் நிறைய பருகவும்.
*உடற்பயிற்சி தவறாமல் தினமும் செய்ய வேண்டும்.
*மாவுச்சத்து குறைவான உணவை சாப்பிட வேண்டும்.
சர்க்கரை அளவைக் குறைக்கும் உணவுகள்
* வெந்தயம்
* வெண்டைக்காய்
* வேப்பிலை
* கற்றாழை
* பட்டை (cinnamon).
தவிர்க்க வேண்டிய உணவுகள்
*உருளை, சேனை, கருணைக்கிழங்கு, பீட்ரூட், வாழைக்காய் உள்ளிட்ட எல்லா கிழங்கு வகைகள்.
*சர்க்கரை, வெல்லம், கற்கண்டு, தேன், குளுக்கோஸ், இனிப்பு, ஜெல்லி, ஜாம், ஐஸ்கிரீம், சாக்லேட், கேக், பிஸ்கெட் போன்ற இனிப்பு வகைகள்.
*ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள்.
*வெண்ணெய், நெய், டால்டா,
தேங்காய் எண்ணெய்.
*எண்ணெய் மற்றும் நெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகள்
*மா, பலா, சப்போட்டா, பேரீச்சை, திராட்சை உள்ளிட்ட பழங்கள்.
*கேழ்வரகு, அரிசி, கோதுமை கஞ்சி, களி, கூழ்
*மைதா மாவு, ஜவ்வரிசி
*எருமை பால், பசும்பால் மற்றும் ஏடு
*மது அருந்துவது, புகை பிடித்தல், புகையிலையை தவிர்க்கவும்.
தாராளமாக சாப்பிடக் கூடியவை
*கீரை வகைகள்.
*காய்கறிகள் முக்கியமானவை (பாகற்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், காலிஃப்ளவர், வாழைத்தண்டு, வாழைப்பூ, கோவைக்காய், சுண்டைக்காய், பீன்ஸ், அவரைக்காய், செளசௌ, நூக்கோல், கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி)
*சமையலுக்கு பயன்படுத்துவதற்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய். எண்ணெயின் அளவு 4-5 டீஸ்பூன் ஒரு நாளில்.
*அசைவ உணவுகள் முட்டையின் வெள்ளைக்கரு, மீன், கோழிக்கறி
*பழ வகைகளில் ஏதேனும் ஒன்றை ஒரு நாளில் சாப்பிடலாம்.
*தெளிந்த வடிகட்டிய சூப் வகைகளான காய்கறி சூப், கீரை சூப், கோழி சூப் மற்றும் மோர், பசிக்கும் நேரத்தில் உண்ணலாம். வெள்ளரிக்காய், அரிசி பொரி.
*காபி, டீ, பால், சர்க்கரை இல்லாமல் குடிக்கலாம்.
*கோதுமை, சிறுதானியம், ஓட்ஸ் உணவுகளை சாப்பிடலாம்.
சில முக்கிய குறிப்புகள்
*சாப்பிடாமல் விரதம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
*தினமும் 10-12 டம்ளர் தண்ணீர் அருந்தவும்.
*மூன்று வேளை உணவு உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும்.
*சரியான நேரத்திற்கு உணவு உண்ணவும்.
*தவறாமல் ரத்தப்பரிசோதனை அடிக்கடி செய்து கொள்ளவும்.
*மருந்துகளை முறைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
*உடற்பயிற்சி செய்வது அவசியம். நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் ேபான்ற மிக எளிமையான உடற்பயிற்சி செய்தல் அவசியம். சீரான உடல் எடையை பின்பற்ற வேண்டும்.
ரத்த சர்க்கரை குறைவாக இருக்கும்போது பின்பற்ற வேண்டியவை (Low Blood Sugar/Hypoglycemia)
ரத்த சர்க்கரை குறைவானால் வரும் அறிகுறிகள் தலைவலி, தலைசுற்றல், கை கால் நடுக்கம், வேர்த்து கொட்டுவது, கை கால் ஜில்லென்று ஆவது, மயக்கம் போடுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் 15 கிராம் (3 டீஸ்பூன்) சர்க்கரை அல்லது குளுக்கோஸை வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.நீரிழிவு நோயாளிகள் உடல்நலம் சரியில்லாதபோது உண்ணக்கூடிய உணவு அரிசி கஞ்சி, பிரெட், பழச்சாறு போன்றவற்றை உண்ணலாம்.
Average Rating