மனிஷா யாதவ் ரீ என்ட்ரி !!(சினிமா செய்தி)

Read Time:2 Minute, 4 Second

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பணும் பாண்டியா போன்ற படங்களில் கதாநாயகியாக, கிளாமர் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் நடித்தவர் மனிஷா யாதவ். ஆனால் பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை. திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்ததுடன், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனம் ஆடி கவர்ச்சி விருந்து படைத்தார். கிளாமர், நடிப்பு என இரண்டு பாத்திரத்துக்கும் நடிக்க தயாரானதையடுத்து இயக்குனர்களின் பார்வை மனிஷா பக்கம் திரும்பியது.

அடுத்து, ‘ஒரு குப்பை கதை’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. டைட்டிலை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தவர் கதையை கேட்டு உருகினார். அதில் நடித்து முடித்தார். ஹீரோவாக நடன இயக்குனர் தினேஷ் நடித்துள்ளார். அஸ்லம் தயாரிக்க காளி ரங்கசாமி இயக்கி உள்ளார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,’விஜய்சார் நடித்த குருவி படம் மூலமாக தயாரிப்பில் இறங்கி 10 வருடம் வெற்றிகரமாக ஓடிவிட்டது. மைனா போன்ற நல்ல படங்களை தந்தபோது பாராட்டினீர்கள். அதுபோன்று ஒரு நல்ல தாக்கத்தை ஒரு குப்பை கதை படமும் ஏற்படுத்தும்’ என்றார். இயக்குனர்கள் அமீர், சீனுராமசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்யா உள்ளிட்டோர் பாராட்டி பேசினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படிப்பது இந்தியாவில்… வேலை வெளிநாட்டிலா… கொந்தளிக்கும் பாராளுமன்ற நிலைக் குழு!!(மருத்துவம்)
Next post தினம் வால்நட் சாப்பிடுங்க… படுக்கையில் அசத்திடுங்க…!!(அவ்வப்போது கிளாமர்)