சட்டவிரோத சிகரட் தொகையுடன் ஒருவர் கைது!!

Read Time:1 Minute, 31 Second

சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபரொருவர் இன்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, பொரலஸ்கமுவ பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 349 என்ற விமானத்திலேயே இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபரிடம் இருந்த 15,400 சிகரட்கள் உள்ளடங்கிய 77 பொட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைப்பற்ப்பட்ட சிகரட்கள் 770,000 பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு சிகரட்களை அரசுடமை ஆக்கியதுடன் சந்தேக நபருக்கு 75,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய்யை நேரில் சந்தித்த தருணம் : கேரளத்து பெண் நெகிழ்ச்சி!! (சினிமா செய்தி)
Next post பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முற்பட்ட குழந்தையின் மரணத்தில் சந்தேகம்!!