சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர் அன்வருக்கு மன்னிப்பு வழங்க மலேசிய மன்னர் ஒப்புதல்: புதிய பிரதமர் மகாதிர் தகவல்!!(உலக செய்தி)

Read Time:5 Minute, 26 Second

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர் அன்வர் இப்ராகிமுக்கு மன்னிப்பு வழங்க மலேசிய மன்னர் ஒப்புக்கொண்டுள்ளதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார். கடந்த 1957ம் ஆண்டுக்கு பிறகு மலேசியாவில் பரிசான் நேஷனல் கட்சியின் ஆட்சிதான் நடத்து வந்தது. மகாதிர் முகமது 1981ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் இக்கட்சியின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், பிஎன் கட்சியில் பிரதமராக தொடர்ந்து பதவி வகித்து வந்த நஜீப் ரசாக் மீது அரசு பணத்தை சுரண்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக அரசியலில் இருந்து விலகி இருந்த மகாதிர் முகமது மீண்டும் அரசியலுக்கு வந்தார். 2016ம் ஆண்டுக்கு பின் கட்சியில் இருந்து விலகி அவர் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்தார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவரது பகதான் ஹாரப்பன் கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து பிரதமராக மகாதிர் முகமது நேற்று முன்தினம் பதவியேற்றார். 61 ஆண்டுகளாக ஆட்சி செய்த பரிசான் நேஷனல் கட்சியை தோல்வியுற வைத்ததன் மூலம் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நஜீம் ரசாக்ைக தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அவரை எதிர்த்த எதிர்க்கட்சிகளுடன் மகாதிர் கூட்டணி வைத்தார்.

மேலும் தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை முன்னாள் துணை பிரதமர் டத்து  அன்வரிடம் ஒப்படைப்பதாகவும் ஒப்புக்கொண்டார். முன்னதாக, அன்வரிடம் பதவியை ஒப்படைப்பதற்கு முன் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே பொறுப்பில் இருப்பேன் என்று மகாதிர் கூறியிருந்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றன. டத்து அன்வர் (70), மகாதிர் பிரதமராக இருந்தபோது துணை பிரதமராக பதவி வகித்தவர். 1998ம் ஆண்டு இவர் மீது ஒரினச்சேர்க்கை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குற்றச்சாட்டுக்களை கூறி பதவியில் இருந்து மகாதிர் வெளியேற்றினார். மேலும், ஓரினச் சேர்க்கை வழக்கில் இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் 2013ம் ஆண்டு தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார். கடந்த 2015ம் ஆண்டு நஜீப் ரசாக் ஆட்சியின் போது மீண்டும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் அடுத்த மாதம் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார். இந்நிலையில், அன்வருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு மன்னர் சுல்தான் முகமது ஒப்புக்கொண்டுள்ளதாக புதிய பிரதமராக பொறுப்பேற்ற மகாதிர் முகமது தெரிவித்துள்ளார். நேற்று நிருபர்களை சந்தித்த பிரதமர் மகாதிர், ‘‘எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்த மன்னர் ஐந்தாம் முகமது சுல்தான், அன்வருக்கு அரசு மன்னிப்பு வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

உடனடியாக டத்து  அன்வருக்கு மன்னிப்பு வழங்குவதாக மன்னர் தெரிவித்துள்ளார். மன்னிப்பு வழங்கப்பட்டவுடன் அவர் விடுதலை செய்யப்படுவார்” என்றார். இதன்மூலம், அன்வர் மீண்டும் அரசியலுக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. அரசு மன்னிப்பு வழங்கப்படாமல், அவர் விடுதலை மட்டும் செய்யப்பட்டு இருந்தால் ஐந்தாண்டுகள் அரசியலில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு இருக்கும்.

மகாதிருக்கு மோடி வாழ்த்து
மலேசியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மகாதிருக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மகாதிருடன் இணைந்து இரு நாட்டு உறவையும் மேலும் வலுப்படுத்துவதற்காக எதிர்நோக்கியுள்ளேன். வாழ்த்துக்கள்‘ என்று பதிவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜபக்ஷர்களைக் குழப்பும் கேள்வி!!(கட்டுரை)
Next post லிப் டு லிப் கிஸ் – வைரலாகும் ஐஸ்வர்யா ராய், ஆரத்யா புகைப்படம்! (சினிமா செய்தி)