பல வங்கிகளில் பணக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் இன்று சிக்கினார்!!

Read Time:2 Minute, 37 Second

அண்மைய நாட்களில் வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் சிக்கியுள்ளார்.

சந்தேகநபர் களனி பிரதேசத்தில் வைத்து கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கடந்த 2017 செப்டம்பர் 12ம் திகதி அன்று கிரிபத்கொடை பிரதேசத்தில் தங்க நகைக் கடை ஒன்றில் 41 இலட்சம் ரூபா பெறுமதியான நகை கொள்ளை மற்றும் 2018 மார்ச் 20 அன்று அதே பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியில் கத்தியை காண்பித்து பாதுகாப்பு அதிகாரியை அச்சுறுத்தி 09 இலட்சம் ரூபா கொள்ளையிட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

அதேவேளை ஏப்ரல் 25 அன்று கந்தானை பகுதியில் தனியார் வங்கியில் திருட முற்பட்ட முயற்சி தோல்வியடைந்த சம்பவம் மற்றும் கடந்த ஏப்ரல் 27 அன்று வத்தளை பிரதேச தனியார் வங்கியில் அதன் பாதுகாப்பு அதிகாரிமீது மிளகாய் தூளை தூவி விட்டு 07 இலட்சம் ரூபா கொள்ளையிட்ட சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியிருந்த பொலிஸார் சீ.சீடிவி காட்சிகளை பரிசோதித்த பின்னர் அனைத்து கொள்ளைகளுடனும் ஒருவர் மாத்திரம் தொடர்புபட்டிருப்பதை அறிந்து கொண்டு அனைத்து வங்கிகளையும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் வத்தளையிலுள்ள வங்கி ஒன்றுக்கு இன்று வந்த சந்தேகத்துக்குறிய ஒருவரிடம் வங்கிப் பாதுகாப்பு அதிகாரி கேள்விகளை தொடுத்த போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் வத்தளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட் நிலையில் கிரிபத்கொட பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அப்பா அப்படி செய்யாதீங்க 13 வயது சிறுமியின் கதறல்(வீடியோ)
Next post சட்டத் திருத்தம் செய்கிறது மத்திய அரசு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பலாத்காரம் செய்தாலும் தூக்கு!!