பாதங்களின் வழியே உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற…!!(மகளிர் பக்கம்)
நம் உடலில் பலவிதமான செயல்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளன. இதன் விளைவாக உடலில் நச்சுக்கள் உருவாகின்றன. இவற்றை வெளியேற்றும் பணியினை நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், செரிமான மண்டலம், சருமம் ஆகியவை செய்கின்றன. இந்த நச்சுக்கள் வெளியேறாமல், உடலில் தங்கும்போது உடல்நலக் குறைவு ஏற்படுகின்றது. இவற்றை வெளியேற்றும் சிகிச்சை முறையே டீடாக்ஸிங் எனப்படும் நச்சு நீக்க சிகிச்சைகள். டீடாக்ஸிங் செய்வதால், உடல், மனம் இரண்டுமே புத்துணர்வு பெறுகின்றன. அதில் ஒரு வழிமுறைதான் பாதங்களின் வழியே நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முறை.
நம் பாதங்களில் உள்ள ஏராளமான ஆற்றல் மண்டலங்கள் நம் உடலில் உள்ள உள்ளுறுப்புகளோடு தொடர்புடையன. அதன் வழியே உடம்பில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் முறை என்பது பண்டைய கால சீனர்களின் மருத்துவமுறை. பல வகையில் பாதங்களை சுத்தப்படுத்தி நச்சுப்பொருட்களை அகற்றலாம்.
முதல் வழிமுறை
ஒரு ஸ்பூன் கல் உப்பு.
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்.
சுடுநீரில் கல் உப்பைப்போட்டு அதில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து பாதங்களை பத்து நிமிடங்கள் வைத்திருப்பது நச்சை வெளியேற்றுவதில் சிறந்த வழி. முதலில் சுடுநீரில் பாதத்தின் மெல்லிய தோலின் துளைகள் திறக்கும். மஞ்சள் என்பது ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரியும். உப்பானது அழற்சிக்கு எதிராக பணிபுரியும். தண்ணீரில் கலந்துள்ள அந்த மூலக்கூறுகள் பாதத் துளைகள் வழியே உள்ளே சென்று உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
இரண்டாவது வழிமுறை
ஒரு கப் கடல் உப்பு.
எப்சம் சால்ட் (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்).
இரண்டு கப் பேக்கிங் சோடா.
எஸன்ஷியல் ஆயில் (விருப்பத்திற்கு தகுந்தது).
மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சுடுநீரில் போட்டு கரைய விடவேண்டும். தண்ணீர் கொஞ்சம் கால் வைக்க ஏதுவான நிலையில் இருக்கும் போது 30 நிமிடங்கள் பாதங்களை அதில் வைத்திருக்க வேண்டும். இது எரிச்சல் போன்ற தோல் பிரச்னைகளை நீக்குவதோடு, நச்சுப்பொருட்களையும் நீக்குகிறது. மெக்னீஸியத்தின் அளவை அதிகரிக்கிறது. உடல் அசதியையும் போக்குகிறது.
மூன்றாவது வழிமுறை
இரண்டு கப் ஹைட்ரஜன் பெராக்சைடு.
ஒரு டேபிள் மேஜைக்கரண்டி சுக்குப்பொடி.
மேலே கொடுக்கப் பட்டுள்ளவற்றை சுடுநீரில் போடவேண்டும். தண்ணீர் கொஞ்சம் கால் வைக்க ஏதுவான நிலையில் இருக்கும் போது 30 நிமிடங்கள் பாதங்களை அதில் வைத்திருக்க வேண்டும். இது அலர்ஜி மற்றும் எரிச்சல் போன்ற தோல் பிரச்னைகளை நீக்குவதோடு, நச்சுப்பொருட்களையும் நீக்குகிறது.
நான்காவது வழிமுறை
அரை கப் பெண்ட்டோனைட் க்ளே (க்ளே என்பது களிமண்).
அரை கப் எப்சம் சால்ட்.
உங்கள் விருப்பமான எஸன்ஷியல் ஆயில்.
முதலில் அரை கப் எப்சம் சால்ட்டை சுடுநீரில் போட்டு கரைய விடவேண்டும். அதில் அரை கப் பெண்ட்டோனைட் க்ளேவைப் போட்டுக் கரைத்து எஸன்ஷியல் ஆயிலையும் சேர்த்த பின்னர் பாதங்களை அதனுள் இருபது நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இது அதிக மெக்னீசியத்தைக் கொடுப்பதோடு, நச்சுப்பொருட்களையும் நீக்குகிறது.
ஃபுட் டீடாக்ஸ் பேட்ஸ்
ஃபுட் டீடாக்ஸ் பேட்ஸ் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். அதை உங்கள் பாதங்களில் மாட்டிக்கொண்டு படுத்துத் தூங்கிவிட வேண்டும். காலை எழுந்து பார்த்தால் அவை கருப்பாகி இருக்கும். அதிலிருந்து உங்கள் உடலின் நச்சுப்பொருட்கள் நீங்கி இருப்பதைப் பார்க்கலாம். டீடாக்ஸிங் செய்வதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். இதனால், உடலில் உள்ள நச்சுக்களும் அசுத்தங்களும் வெளியேறும். கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல், நிணநீர், சருமம் சுத்தமாகும். உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும். உள்ளுறுப்புகள் இயக்கம் சீரடையும். ரத்த ஓட்டம் சீராகி, புத்துணர்வு, ஆரோக்கியம் அதிகரிக்கும்.
Average Rating