ஆடை கட்டி வந்த நிலவே!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 47 Second

உங்கள் வீட்டில் புதிதாய் வந்து பூத்திருக்கும் பச்சிளம் குழந்தைக்கு ஆடை எடுக்கப் போகிறீர்களா? ஒரு நிமிடம்!

முதல் மூன்று வருடங்கள் உங்கள் குழந்தைகளின் ஆடைகளுக்கு ஆயுள் கம்மிதான். எனவே உடைகள் வாங்கும் போது, ஓரிரு சைஸ் பெரிய அளவையே வாங்கவும். முதலில் கொஞ்சம் லூஸாக இருப்பது போல் தெரிந்தாலும், உங்கள் குட்டி பாப்பா கை காலை ஆட்டி விளையாட இதுவே செளகரியமாக இருக்கும். மேலும் சில டிப்ஸ்களின் அணிவகுப்பு இதோ:

* குழந்தைகளின் ஆடைகளில் டிசைன், ஃபேஷன் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். முதலில் அது குழந்தைகளுக்கு செளகரியமாக இருக்குமா, போட கழற்ற சுலபமாக இருக்குமா, முக்கியமாக எளிதாக துவைக்க வருமா என்று தான் பார்க்க வேண்டும்.

* எந்த உடையாக இருந்தாலும் மாற்ற வசதியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். நைட் டிரஸ் என்றால் உங்கள் செல்லத்தை தொந்தரவு செய்யாமல் எளிதாக மாற்றும் வகையில் இருக்க வேண்டும்.

* குழந்தைகளின் உடைகள் கழுத்து, அக்குள், இடுப்பு பகுதிகளில் இறுக்கமாக இருக்கக் கூடாது.

* பச்சிளங் குழந்தைகளுக்கு அதிக விலை கொடுத்து ஆடை வாங்குவது அநாவசியம்.

* ஓட, விளையாட, உட்கார்ந்து எழ தேவைப்பட்டால் படுத்துத் தூங்கவும் வசதி உள்ளதாக இருக்க வேண்டும். ‘ஃபேஷன்’ என்ற பெயரில் அந்த குட்டீஸ்களுக்கு தொல்லை தரும் ஆடைகள் வேண்டாமே!

* குழந்தைகளின் சருமம் மிக மென்மையாக இருக்கும். அதற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உடைகளை தேர்வு செய்ய வேண்டும். முரட்டுத் தையல், குத்தும் வேலைப்பாடு, உடலை பதம் பார்க்கும் ஹூக், பட்டன்கள் வேண்டாமே!
சிந்தடிக், பட்டு உடைகள் குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றதல்ல. இவை சில குழந்தைகளுக்கு தோல் நோயை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

* முன்புறம் முழுவதும் திறக்க முடிந்த அல்லது பெரிய கழுத்தளவுள்ள உடைகளையே வாங்கவும். ஏனெனில் ஆடை மாற்றும்போது, அது முகத்தை மூடினால் குழந்தைகளுக்கு கெட்ட கோபம் வரும்.

* ஏதாவது விசேஷத்திற்கு போட வேண்டும் என்பதற்காக செயற்கை இழை துணிகளை எடுத்தாலும், உள்ளே பருத்தி துணி லைனிங் இருக்க வேண்டியது அவசியம்.

* லேசான ஷால்கள், தொங்கும் லேஸ் வைத்த ஆடைகளை தவிர்க்கவும். அதன் ஓட்டைகளில் பிஞ்சு விரல்கள் மாட்டினால் குழந்தை எரிச்சலுற்று அழும்.

* மூன்று மாதம்வரை வெள்ளை மற்றும் இள வண்ண உடைகளையே அணிவிக்கவும். ஏதாவது பூச்சி, வண்டு ஓடினால் சுலபமாக கண்டறியலாம். கொஞ்சம் வளர்ந்ததும் அடர் வண்ணங்களுக்கு மாறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..!!(அவ்வப்போது கிளாமர்)
Next post உடல் சோர்வை போக்கும் மருத்துவம்!!(மருத்துவம்)