இதயமே இதயமே!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 4 Second

பெரிகார்டியம் என்பது இதயத்தை சுற்றி மூடியிருக்கும் பை போன்ற ஒன்றாகும். வாத சுரத்தினாலும் சிறுநீரக உறுப்புகளின் குறைபாடினாலும் இதயஉறை சுழற்சியுற நேரிடுகிறது. இந்நோய் காண்போர்க்கு மார்பில் வலியும் மூச்சு விடுவதில் சிரமமும் தோன்றும் நாடிகள் மெதுவாகச் செல்லும்.
இந்நோயால் இதயத்தின் தசைப்பகுதியில் சுழற்சி, அழற்சி ஏற்படும். மார்புவலி, மூச்சு விடுவதில் சிரமம், மூளைக் காய்ச்சல், சோர்வு ஆகியவை தோன்றும்.
மாரடைப்பு நோய் தாக்கும்போது இதயத்தைக் கசக்கிப் பிழிவதைப் போல் தாங்க முடியாத வலி உண்டாகும்.
வாந்தி, மயக்கம், எப்போதும் இல்லாத அளவுக்கு வியர்வை வெளியேறுதல் ஏற்படும்.

பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களை இதயநோய் தாக்குகிறது. இதய பலவீனத்தாலும் முறையற்ற உணவு அளவுக்கு மீறிய உடல் உழைப்பு, மன உளைச்சல் அதிகளவு கொழுப்பு உணவுகள் சாப்பிடுதல், புகை பிடித்தல், மது அருந்துவதால் ஆகியவை இந்நோய் வருவதற்கு முக்கியக் காரணமாகும்.
இதயம் பலம் பெறஅத்திப்பழத்தை உலர்த்தி இடித்து, பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவுக்கு காலை, மாலை பாலில் கலந்து உட்கொள்ள வேண்டும். செம்பருத்திப் பூவை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்துக் காலை மாலை பருகினால் மார்புவலி, இதய பலவீனம் தீரும்.
துளசி இலையை பிட்டவியலாய் அவித்து பிழிந்த சாறு 5 மில்லி காலை மாலை சாப்பிட்டு வந்தால் பசி அதிகரிக்கும். இதயம் மற்றும் கல்லீரலை பலப்படுத்தும்.

ரோஜாப்பூவுடன் இரண்டு பங்கு சீனாக் கல்கண்டு கலந்து பிசைந்து சிறிது தேன் கலந்து 5, 6, நாட்கள் வெயிலில் வைக்க குல்கந்து ஆகும். சுழற்சிக்காய் அளவு தொடர்ந்து சாப்பிட இதயம் கல்லீரல் நுரையீரல், இரைப்பை, சிறுநீரகம், குடல் ஆசனவாய் ஆகியவை பலமாகும். சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து அதே அளவு தேன் சேர்த்து தினசரி காலையில் ஒரு தேக்கரண்டி அளவு வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் சாப்பிட்டு வர இதய அடைப்பு, படபடப்பு நீங்கி, உங்கள் காதலியிடம் காதலை சொல்லும் அளவுக்கு இதயம் பலம் பெறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு நொடியில் நடந்த விபத்து அதிர்ச்சி வீடியோ !!
Next post கனவு கன்னி ஆக ஆசை இல்லை : ரகுல் ப்ரீத் தடாலடி !! (சினிமா செய்தி)