மாம்பழமாம் மாம்பழம்!!(மருத்துவம்)
* மாம்பழத்தின் தாயகம் தெற்கு ஆசியா.இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசியப்பழம். பங்களா
தேஷின் தேசிய மரம் மாமரம்.
* சில மாமரங்கள் 300 ஆண்டுகள் கழிந்த பின்பும் காய்க்கின்றன.
* உலகில் 500 வகையான மாம்பழங்கள் உள்ளன. இந்தியாவில் 283 வகைகள் உள்ளன. இவற்றில் 30 மட்டுமே பிரபலம். பாகிஸ்தானில் 70 வகைகள் உள்ளன.
* மாம்பழம் 5-25 சென்டிமீட்டர் நீளமும், 140 கிராம் முதல் 2 கிலோ வரையிலும் எடை இருக்கும்.
* உலக மொத்த மாம்பழ உற்பத்தியில் பாதிக்கு மேல் இந்தியாவில் தான் உற்பத்தியாகிறது. அடுத்து சீனா, மூன்றாவது தாய்லாந்து. ஆனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாவது ரொம்ப குறைச்சல். மாறாக உற்பத்தியானதில் பெரும்பாலானவற்றை இந்தியர்களே சாப்பிட்டு விடுகின்றனர்.
* மாம்பழங்களின் மன்னன் என அழைக்கப்படும் பழம் அல்போன்சா!
* அக்பர், மாம்பழம் சாப்பிடுவதில் மிகவும் பிரியமுடையவர். அதனால் கிழக்கு இந்தியாவில், தர்பங்கா என்ற இடத்தில், பெரிய அளவில் ஒரு லட்சம் மாமரங்களை பயிரிட்டு, ஏராளமான மாம்பழம் கிடைக்க வசதி செய்தார்.
* பானங்களில் மாம்பழ பானம் மிகவும் பாப்புலர். ப்ராண்டெட் மாம்பழ சாறுகள் மக்களிடையே இன்று மிகவும் பிரபலம்.
* கர்நாடகா, ஆந்திரா-தெலுங்கானாவில் உகாதி என்றாலே மாம்பழ பச்சடி நிச்சயம் உண்டு.
* தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்கள், பண்டிகை காலங்களில் செய்யும் முதல் வேலை, மறக்காமல் வாசல் அருகே மாவிலைகளை கட்டுவது தான்.
* உலகின் மிக மிக இனிமையான மாம்பழமாக 1995-ல் கின்னஸ் புக் ஆஃப் உலக சாதனை புத்தகம் அறிவித்த மாம்பழம் ‘TanBales’.
* மாம்பழம் சாப்பிடுவதால் வைட்டமின் சி மற்றும் ஏ நிச்சயம் கிடைக்கும். உடலில் ஊட்டச்சத்து கூடும். ரத்த அழுத்தத்தை நார்மலாக மாற்றுகிறது. கண்பார்வையை சீராக்கும். எலும்புகளை வலு ஏற்றும்.
* உடம்பில் ஏற்படும் வாய், நுரையீரல், வயிறு, மார்பக புற்றுநோய்களை வரவிடாமல் தடுக்கிறது.
* உலர்ந்த பழச்சதை மற்றும் கொட்டை ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
* இந்தியாவின் சூப்பர்-10 மாம்பழங்களை அறிந்து கொள்வோம்.
அல்போன்சா – மகாராஷ்டிரா
பதாமி, ராஷ்பரி மல்லிகை – கர்நாடகா
சான்சா – வட இந்தியா
தசேரி – உத்தரப்பிரதேசம்
கேசார் – சவுராஷ்டிரா – குஜராத்
லங்கரா – வட இந்தியா
மல்கோவா நீலம் – தமிழ்நாடு
ஹிம்சாகர் – மேற்குவங்காளம்
தோட்டாபுரி – ஆந்திரா
பங்கனபள்ளி – ஆந்திரா.
இவை தவிர இமாம்பசந்த், அமரப்பள்ளி மற்றும் ராஜ்புரி ஆகியவையும் பிரபலம்தான். திருச்சி மாம்பழ சாலையில் விளையும் இமாம்பசந்த் மிக மிக சுவையானது.
* மேற்கு இந்திய தீவுகளில் ‘lets go for a mango walk’ எனக் கூறினால் ‘வா, மாம்பழத் தோப்பு சென்று, மாங்காயை திருடித் தின்போம்’ எனப் பொருள்.
* ஆஸ்திரேலியாவில் உற்பத்தியான மாம்பழங்களை எடுத்து வந்து முதல் விற்பனையை முழுவதுமாக நற்காரியங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுவர்.
* தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு விமான நிறுவனம் ஒன்றின் பெயர் ‘mango airlines’. காளிதாசன்
மாம்பழத்தை புகழ்ந்து கவி இயற்றியுள்ளான்.
* ஊறுகாய் என்றதுமே ஆவக்காய் ஊறுகாய் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இது தவிர எண்ணெய் மாங்காய் ஊறுகாய், மாவடு ஊறுகாய், மாங்காய் தொக்கு, மாங்காய் பிசிறல் மற்றும் மாங்காய் வெந்தயம் ஊறுகாய் என பல ஊறுகாய்களை செய்து வைத்திருந்து சாப்பிடலாம்.
* மாங்காயை பொடிப் பொடியாய் நறுக்கி உப்பு பிசறல் மாங்காய், உரப்பு மாங்காய் என இரு வெரைட்டி செய்து சாப்பாட்டின் போது சேர்த்து சாப்பிடலாம்.
* மாங்காயை நறுக்கி வெல்லம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து மாங்காய் ஸ்வீட் பச்சடி தயார் செய்து சாப்பிடலாம்.
* மாம்பழ சாதம் மிகவும் பிரபலம்.
* ஆயிரம் சொன்னாலும் பழுத்த மாம்பழத்தை நறுக்கி துண்டு துண்டுகளாக சாப்பிடுவது பலருக்கு பிடிக்கும். வயதானவர்களுக்கோ முழு மாம்பழத்தை அப்படியே கடித்து சாறுடன் ருசித்து சாப்பிடுவது பிடிக்கும்.
* மாம்பழத்தை ஒரே சமயத்தில் 3, 4 முழுப்பழம் என சாப்பிடாமல், அளவாக சாப்பிட்டால் ஜீரணத்திற்கு
மிக நல்லது. மலச்சிக்கலுக்கு குட்பை சொல்லி விடலாம்.
Average Rating