சிங்கப்பூர் தமிழரின் காளி கோயிலில் நிதி மோசடி!!( உலக செய்தி)

Read Time:2 Minute, 24 Second

சிங்கப்பூரில் பழமையான வீரமாகாளியம்மன் கோயிலில் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்தது தொடர்பாக அறங்காவலர் குழு தலைவரும், நிர்வாக செயலாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா சிரங்கூன் சாலையில் அமைந்துள்ளது வீரமாகாளியம்மன் கோயில். 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான இந்து கோயிலான இது, கடந்த 1988ம் ஆண்டு சிங்கப்பூர் அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இக்கோயிலின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அறநிலையத்துறை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. 8 மாதமாக நடந்த இந்த விசாரணையில், கோயில் அறங்காவலர்களான நிர்வாகக் குழு தலைவர் சிவகடாட்சம், செயலாளர் ராதா கிருஷ்ணன் செல்வகுமார், முன்னாள் நிர்வாகக்குழு தலைவர் செல்வராஜூ ஆகியோர் கோடிக்கணக்கில் கோயில் நிதியை முறைகேடாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுமார் ₹7.5 கோடிக்கு வங்கி காசோலைகளில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலேயே செல்வகுமார் ₹1.75 கோடிக்கு கோயில் பெயரில் கடன் பெற்றுள்ளார். இதன் காரணமாக சிவகடாட்சம், செல்வகுமார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். செல்வராஜூ கோயில் நிர்வாகத்தில் எந்த பதவியையும் ஏற்றால் அவர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் உறுதி கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும்’!!(அவ்வப்போது கிளாமர்)
Next post சினிமாவில் அறிமுகமான சூர்யாவின் தங்கை !!(சினிமா செய்தி)