சிறுமியை கற்பழித்த சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை !!(உலக செய்தி)

Read Time:3 Minute, 13 Second

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் 77 வயதுடைய ஆசாராம் பாபு. ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கி படித்த உ.பி. ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி, ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தார். இதேபோல் பல்வேறு பலாத்கார வழக்குகள் இவர் மீது குவிந்தன.

இதையடுத்து, ஆசாராம் பாபுவை கடந்த 31-8-2013 அன்று பொலிசார் கைது செய்து கற்பழிப்பு மற்றும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, ஷாஜஹான்பூர் சிறுமி வழக்கில் ஆசாராம் பாபு மற்றும் அவருடன் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த நான்காண்டுகளாக ஜோத்பூர் நகரில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசுத் தரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்றுவந்த நிலையில் இன்று (25) தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி மதுசூதன் சர்மா தெரிவித்திருந்தார்.

அதன்படி ஆசாராம் பாபு அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கு நீதிபதி இன்று சென்று, அங்குள்ள விசாரணை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினார். அப்போது ஆசாராம் பாபு உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். 2 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

சற்று நேரத்திற்கு பின்னர் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும், மற்ற இரு குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி ஆசாராம் பாபு ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடும் என்பதால் சிறையை சுற்றியும், அருகில் உள்ள பகுதிகளிலும் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி, ராஜஸ்தான், குஜராத், அரியானா மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சம்பளத்துடன் 26 வாரம் விடுமுறை!!(மகளிர் பக்கம்)
Next post யூடியூப் வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் !!(உலக செய்தி)