தூக்கத்தை தொலைத்த பிந்துமாதவி (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 55 Second

கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக கோலிவுட்டில் வேலை நிறுத்தம் நடந்த நிலையில் நடிகர், நடிகைகள் பலர் படப்பிடிப்பு இல்லாமலிருந்தனர். பொழுதை கழிக்க நடிகைகள் பலர் வெளிநாடு சுற்றுலா புறப்பட்டனர். இந்நிலையில் நடிகை பிந்துமாதவி ஆந்திராவில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு சென்று தங்கி பொழுதை கழித்தார். அசல் கிராமத்து பெண்ணாகவே மாறிய அவர் வயல்வெளியில் ஆடுகளை மேய்த்தும் வீட்டில் விறகு அடுப்பு மூட்டி சமையல் செய்தும், கம்மாங்கரையில் குளித்தும் ஜாலியாக இருந்த தருணங்களை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார்.

பலரும் அதை பாராட்டினார்கள். நடிகை ஆன பிறகும் கிராமத்தை மறக்காத அவரது செயல் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில் தனது இணைய தள பக்கத்தில் மிரட்சியான பார்வையுடன் தலைவிரிகோலமாக ஒரு புகைப்படத்தை சில தினங்களுக்கு முன் வெளியிட்டு நேற்று இரவு முழுவதும் தூக்கமில்லை என்று பதிவு செய்திருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. தூக்கமில்லாமல் போனதற்கு காரணம் என்ன என்று அவர் தெரிவிக்கவில்லை. இதனால் குழம்பிப்போன ரசிகர்கள், உங்கள் தூக்கத்தை கெடுத்தது யார் என்று கேள்விகேட்டு அவருக்கு டுவிட் செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!( உலக செய்தி)
Next post உடலுக்கு பலம் தரும் கரும்பு!!(மருத்துவம்)