மாமியாரை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட மருமகன்!!

Read Time:1 Minute, 53 Second

இன்று (24) பிற்பகல் 2.10 மணியளவில் எல்பிட்டிய பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எல்பிட்டிய, பிட்டுவல வீதியின் விஜய மாவத்தையில் உள்ள வீடொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் அவசர இலக்கமான 119 இற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய, பிட்டுவல பகுதியை சேர்ந்த 85 வயதுடைய லியனகே லீலாவதி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் மருமகன் காலால் உதைந்த காரணத்தால் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும், அடிக்கடி குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினை உக்கிரமடைந்த காரணத்தினால் தான் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்த பிறகு சந்தேகநபரான 45 வயதுடைய ஜகன் கீர்த்தி அபேசேகர எனும் மருமகனும் வீட்டில் உள்ள அறையொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனிதர்களின் செயல்பாட்டால் வனவிலங்குகளின் அழிவை பூமி சந்திக்க நேரிடும்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!( உலக செய்தி)
Next post சூட்டைக் கிளப்புவார் ரெஜினா! (சினிமா செய்தி)