நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!( உலக செய்தி)

Read Time:2 Minute, 8 Second

பென்சில்வேனியன்: நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் பரப்புவதாக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியக்கள், பெரும்பாலும், வயிற்று வலி, ரத்தத்தில் விஷம் ஏறுதல், நிமோனியா ஆகிய மனிதர்களுக்கு தொடர்புடைய நோய்களை பரப்புகின்றன. ஈக்களால், தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப முடியும். சொல்லப்போனால், அவை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், அவற்றால் உயிருடன் உள்ள பாக்டீரியாக்களைப் பரப்ப முடியும்.

வீட்டில் பரவலாக காணப்படும் ஈக்களின், உடலின் மேலும், உடலினுள்ளும் இருக்கும் நுண்ணுயிரிக்கள் குறித்து மரபணு ஆய்வுமுறை வழியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வீட்டில் பொதுவாக பார்க்கக்கூடிய ஈக்கள் 351 வகையான பாக்டீரியாக்களை பரப்புகின்றன. சூடான காலங்களில் வரும், நீலநிற ஈக்கள் 316 வகை பாக்டீரியாக்களை பரப்புகின்றன. இந்த இருவகை ஈக்களாலும், அதிகப்படியான பாக்டீரியாக்கள் பரப்பப்படுகின்றன. பொதுசுகாதார அதிகாரிகளால், நோய்களை திடீரென பரப்பும் காரணிகளாக ஈக்கள் பார்க்கப்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சற்று முன் அதிர்ச்சி விபத்து ! டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரி நேரடி காட்சி!!(வீடியோ)
Next post தூக்கத்தை தொலைத்த பிந்துமாதவி (சினிமா செய்தி)