மனிதர்களின் செயல்பாட்டால் வனவிலங்குகளின் அழிவை பூமி சந்திக்க நேரிடும்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!( உலக செய்தி)

Read Time:1 Minute, 46 Second

ஏற்கனவே 5 முறை வெகுஜன அழிவை சந்தித்துள்ள பூமி, தற்போது 6-வது முறையாக பல உயிரினங்கள் அழியும் நிலையை சந்தித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், நீர்நிலை இருவாழ்விகள் என 27,600 உயிரினங்கள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் 32% உயிரினங்களின் எண்ணிக்கை பெரும் சரிவை சந்தித்து வருவதடன் அவற்றின் வாழ்விடங்களும் பெருமளவு சுருங்கி வருவது கண்டறியப்பட்டு உள்ளது.

சிறுத்தை, சிங்கம், ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட பாலூட்டிகளையும் சேர்த்து 9,000 முதுகெலும்பு உயிரினங்களின் எண்ணிக்கை கடந்த 115 ஆண்டுகளில் பெருமளவு சரிந்துள்ளது. மொத்தமே 7,000 என்ற அளவில் இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை, கடந்த 15 ஆண்டுகளில் 53% சரிந்துள்ளது. ஆப்பிரிக்க சிங்கங்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்களில் 40% சரிந்துள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ தீவுகளில் உராங்குட்டன்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இதனால் உயிரின பன்முகத்தன்மை பாதிக்கப்படும் என்றும் மனிதகுலத்தின் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த அசிங்கம் உனக்கு தேவையா!!(வீடியோ)
Next post மாமியாரை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட மருமகன்!!