நல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்!(மருத்துவம்)

Read Time:1 Minute, 46 Second

தூக்கமின்மையால் அவதிப்படுகிறவர்களுக்கு எளிமையான ஓர் ஆலோசனையை உளவியல் நிபுணர்கள் இப்போது வழங்கி வருகிறார்கள். இரவு உணவுக்குப் பிறகு, டைரி எழுதும் பழக்கத்தைப் பின்பற்றினால் நல்ல தூக்கம் கியாரன்டி என்கிறார்கள்.

உங்களது கடந்த காலம், உங்களுக்குப் பிடித்த பயணம், மறக்க முடியாத நிகழ்வுகள் என மனதில் இருப்பதை எழுத ஆரம்பிக்கும்போது அழுத்தங்களும், கவலைகளும் குறைகிறது. இதனால் தூக்கமும் வந்துவிடும். இது ஆராய்ச்சியிலும் உறுதியாகி இருக்கிறது. குறிப்பாக, நாட்குறிப்பில் எதைப் பற்றி எழுத வேண்டும் என்பதும் இதில் முக்கியத்துவம் பெறுகிறது.

அன்று நடந்தவை அல்லது அன்று சாதித்தவற்றை எழுதுவதைப் போலவே, நாளை என்ன செய்ய வேண்டும் என்பதையும் எழுதுவது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்குமாம். Journal of Experimental Psychology இதழில் இந்த ஆய்வுக்கட்டுரை வெளியாகியிருக்கிறது.

குறிப்பாக, கடந்த கால அனுபவங்களை எழுதுகிறவர்களைவிட நாளை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாட்குறிப்பில் எழுதியவர்கள் 15 நிமிடத்துக்குள் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டனர் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை!!(அவ்வப்போது கிளாமர்)
Next post இந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்!!(கட்டுரை)