தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் பலி!!( உலக செய்தி)

Read Time:1 Minute, 11 Second

பல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், காபுல் நகரின் தாஷ்-இ பார்சி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த வாக்காளர் பதிவு மையத்தில் இன்று நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி, தான் கொண்டு வந்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!!
Next post கணவருடன் ஐஸ்வர்யாராய் தகராறா? (சினிமா செய்தி)