தாவி ஓடாத கங்காருவை கல்லால் அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள்: சீனாவில் கொடூரம்!( உலக செய்தி)

Read Time:1 Minute, 49 Second

தென்கிழக்கு சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் தாவி ஓடாத கங்காருவை சுற்றுலா பயணிகள் கல்லால் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் விலங்கு ஆர்வலர்கள் மற்றும் மக்களிடையே பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் 12 வயதான பெண் கங்காரு ஒன்று பார்வைக்கு விடப்பட்டிருந்தது. சில சுற்றுலா பயணிகள் பார்க்கும்போது கங்காரு அமைதியாக இருந்ததால், அதனை தாவி ஓடுமாறு கூச்சலிட்ட சுற்றுலா பயணிகள் ஒருகட்டத்தில் அதன் மீது கற்களை வீசி எறிந்தனர்.

இதில் படுகாயமடைந்த கங்காரு உட்புற ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அதே கூண்டில் இருந்த 5 வயது ஆண் கங்காரு மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் காயமடைந்த அந்த கங்காருவிற்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கற்களை அப்பகுதியில் இருந்து அகற்றிய பின்பும் வேறு இடத்தில் இருந்து கற்களை கொண்டு வரும் சுற்றுலாப் பயணிகள் விலங்குகளை தாக்குவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கற்களை வீசிய சுற்றுலா பயணிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இசை நிகழ்ச்சியின் மீது துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!!
Next post விரைவில் திருமணம்… !!(சினிமா செய்தி)