8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 7 Second

டெல்லியின் அமான் விஹார் பகுதியில் மனநலம் பாதித்த பெண் ஒருவர் தனது 8 மாத ஆண் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் அமான் விஹார் பகுதியில் ஒருவர் தனது மனைவி மற்றும் 8 மாத ஆண் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மற்ற இரண்டு பெண் குழந்தைகள், அவரது தந்தை வீட்டில் இருந்துள்ளனர். வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்றுள்ளார்.

வீட்டினுள் அவரது மனைவி தனது 8 மாத குழந்தையின் தலையை துண்டித்து அந்த குழந்தையின் உடலை மடியில் வைத்துகொண்டு தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் மனநலம் பாதித்தவர் என்பதும், ஏற்கனவே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னரும் அவர்களது மற்றொரு ஆண் குழந்தையை அவர் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சியான உடற்தோற்றம் பெருமை : பெண்களுக்கு ஹீரோயின் அட்வைஸ்!! (சினிமா செய்தி)
Next post இயக்குனர் உடன் நடிகை திரிஷா பொது இடத்தில் செய்த காரியம்!!(வீடியோ)