2ம் பாகத்தில் நடிக்க மறுத்த சமந்தா !!(சினிமா செய்தி)

Read Time:2 Minute, 28 Second

தெறி, தங்கமகன், 24, அஞ்சான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. அவர் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்துள்ள, ‘நடிகையர் திலகம்’ படம் திரைக்கு வரவுள்ளது. முன்னதாக ராம் சரண் உடன் சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலம்’ தெலுங்கு படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஹிட்டானது. கிராமத்து பெண் வேடம் ஏற்று சமந்தா நடித்திருந்தார். படம் ஹிட்டானதால் இதன் 2ம் பாகம் உருவாக்க பட குழு திட்டமிட்டிருக்கிறது. இதுபற்றி சமந்தா கூறியது: நிறைய படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் கடும் வெயிலில், ரங்கஸ்தலம் படத்தில் நடித்ததுபோல் வேறு படத்திற்கு நடித்ததில்லை. சுடுமணலில் காலில் செருப்பு அணியாமல் பங்கேற்று நடித்தேன்.

இன்னமும் அந்த சூட்டை உணர முடிகிறது. படத்தின் வெற்றி, பட்ட கஷ்டங்களை மறக்க செய்துவிட்டது. கிராமப்பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோதே அப்பகுதியில் இருந்தவர்கள் ‘இந்த வெயிலில் எங்களாலேயே வெளியில் வரமுடிய வில்லை, நீங்கள் எப்படி படப்பிடிப்பு நடத்துக்கிறீர்கள்’ என்று கேட்டனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு சைக்கிளில் செல்வதுபோல் காட்சிகள் படத்தில் இடம்பெற்றது.

ஆனால் கரடு முரடான அப்பகுதியில் சைக்கிளில் செல்வது கடினமாக இருந்தது. என்னால் சரியாக சைக்கிள் ஓட்டிச் செல்லமுடியவில்லை. சக நடிகர்களிடம். படகுழுவினரிடம் உதவி கேட்டுதான் சைக்கிள் ஓட்டி நடித்தேன். படம் வெற்றி பெற்றதால் இதன் 2ம் பாகம் உருவாக்க இயக்குனர் சுகுமார் திட்டமிட்டால் நான் நடிக்க மாட்டேன். அதற்கு காரணம் ரங்கஸ்தலம் எனக்கு ஒரு மேஜிக்காக அமைந்தது. மீண்டும் மீண்டும் அதை கொண்டு வர முடியாது. இவ்வாறு சமந்தா கூறினார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடை மட்டுமா அழகு? (மகளிர் பக்கம்)
Next post நள்ளிரவில் போலீஸ் உடையில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!!(வீடியோ)