கிழிந்த ஜீன்ஸில் திரிஷா ரசிகர்கள் கலாய்ப்பு!! (சினிமா செய்தி)

Read Time:2 Minute, 20 Second

கடந்த 1 மாதத்துக்கும் மேலாக கோலிவுட்டில் புதிய படங்களின் படப்பிடிப்பு நடக்காமல் வேலை நிறுத்தம் நடந்து வந்தது. அதற்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முன்னதாக வேலை நிறுத்த காலத்தை வீணடிக்காமல் சில ஹீரோ, ஹீரோயின்கள் வெளிநாடு சுற்றுலா சென்றனர். நடிகை திரிஷா அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சுமார் 2 வாரம் தோழிகளுடன் ஊர் சுற்றி பொழுதை கழித்தார். நியூயார்க் உள்ளிட்ட சில நகரங்களில் சுற்றி வந்தவர், சமீபத்தில் சென்னை திரும்பினார். நெருக்கமான தோழிகள் அவரை சந்தித்தனர். அவர்களுடன் நின்றபடி புகைப்படம் எடுத்த திரிஷா, அதை தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் திரிஷாவை கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.

கிழித்து தைத்த அல்லது தரையில் பலமாதம் தேய்த்ததுபோன்ற ஜீன்ஸ் பேண்ட் அணிவது இளவட்டங்களின் நாகரீக மாக உள்ளது. அதுபோன்ற ஒரு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து தோழிகளுடன் திரிஷா போஸ் அளித்திருந் தார். ெதாடையிலிருந்து முட்டிக்கால்வரை கிழிந்து நூல் நூலாக தொங்கும் ஜீன்ஸ் பேண்ட்டை திரிஷா அணிந்திருந் ததே ரசிகர்களின் கலாய்ச்சலுக்கு காரணம். ஆனால் அதுபற்றி திரிஷா கண்டுகொள்ளவில்லை. சிறுமி ஆஷிபா பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு நீதி கேட்டு டுவிட்டரில் மெசேஜ் வெளியிட்டதுடன், விஜய்யுடன் தான் நடித்த ‘கில்லி’ படம் திரைக்கு வந்து நேற்றுடன் 14 வருடம் ஆனதை நினைவு கூறும் வகையில் தகவல் பகிர்ந்துகொண்டிருக் கிறார் திரிஷா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க!!(வீடியோ)
Next post குறிப்பால் உணர்த்தல்!!( கட்டுரை )