நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கற்பழித்த கணவர்!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 39 Second

உத்தரபிரதேச மாநிலம் கொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேம்நாத். இவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை துன்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவியை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச்சென்றார்.

பின்னர் அங்கு தயாராக இருந்த தனது நண்பர்கள் 2 பேருக்கு மனைவியை விருந்தாக்கினார். மேலும், அவர்களுடன் சேர்ந்து பிரேம்நாத்தும் தனது மனைவியை கற்பழித்தார். இந்த கொடூர காட்சிகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

இதுபற்றி யாரிடமாவது கூறினால் வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என மிரட்டினர்.

இந்த நிலையில், அந்த பெண் இதுபற்றி பொலிஸில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து பிரேம்நாத்தை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் 2 பேரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கற்பழிக்கப்பட்ட பெண் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூர்ணா நடிக்கும் குந்தி !(சினிமா செய்தி)
Next post “நாங்க எப்பவும் ஃப்ரெண்ட்ஸ்தான்!” (மகளிர் பக்கம்)