இன்பம் எட்டலாம்! : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-6)

Read Time:11 Minute, 8 Second

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-6)

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!  (உடலுறவில் உச்சம்!! – பகுதி-6)
 

மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள்.

அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள்.

ஆனால், இதுபோன்ற எவ்விதமான முயற்சிகளும் தேவையின்றி ஆணும், பெண்ணும் சந்தோஷமான மனநிலையைக் கலவியின் மூலம் மிக எளிதாக அடைய முடியும்.

இதுவே திருப்தியான நிலை என்று விவரிக்கிறார் வாத்ஸ்யாயனர்.

ஆணும் பெண்ணும்  அடிக்கடி கலவியில்   ஈடுபடுவதன் மூலம் அல்லது கலவியைப் பற்றி மனத்தில் எண்ணிக்கொண்டிருப்பதன் மூலம் திருப்தி, சந்தோஷத்தை அடைய முடியும்.

தன் மனைவி அல்லது கணவனுடன் உறவுகொள்ளும்போது, வேறு கற்பனை நபரை மனத்தில் நினைத்துக்கொள்வதன் மூலமும் திருப்தி அடைய முடியும்.

ஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடம் இன்பத்தை எட்டு வழிகளில் பெற முடியும் என்கிறார் வாத்ஸ்யாயனர்.

ht1769 எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!  (உடலுறவில் உச்சம்!! – பகுதி-6) எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!  (உடலுறவில் உச்சம்!! – பகுதி-6) ht1769முதல் வழி

கலவி இன்பம் கிடைப்பதற்கான முதல் வழி தழுவுதல்.

வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்தின் மூலம் கணவன்-மனைவி ஆனவர்கள், ஸ்பரிச சுகத்தை முன்னரே அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

அதுபோல், காதலர்களின் முதல் ஸ்பரிசமும் அதிக இன்பமும் திருப்தியும் தரக்கூடியது.

தொடுவதற்கு முன்னதாகவே, ஸ்பரிசத்தைப் பற்றி மனத்துக்குள் எண்ணிக்கொண்டிருப்பதன் மூலமும், பட்டும் படாமலும் தொட்டு நகர்தல் மூலமும் கிடைக்கும் தழுவுதல் இன்பம் மிகவும் உயர்வானதாகும்.

பிறர் அறியாத நேரத்தில் ஆண் அல்லது பெண் இடித்துவிட்டு நகர்தலும், உடலில் அந்தரங்க இடத்தைத் தொட்டுவிட்டுச் செல்வதும் அதிக திருப்தி தரக்கூடியதாக, நினைத்து நினைத்து சந்தோஷப்படக்கூடியதாக இருக்கும்.

யாரும் காண முடியாத இருட்டில், ஏராளமான முகம் தெரியாத மனிதர்களின் கூட்டத்தின் நடுவில் அல்லது காதலர்கள் இருவரும் ரகசிய தனி இடத்தில்  இருக்கும்போது அவசரம் அவசரமாக கட்டிக்கொள்வதும், உராய்ந்துகொள்வதும் இந்த முதல் வகை இன்பமாகும்.

பிடித்து விடுதல் அல்லது கசக்குதல் போன்றவையும் தழுவல் வகையைச் சேர்ந்ததாகும்.

இந்தத் தொடுதல்   மூலம் கிடைக்கும் சந்தோஷம், கலவி   அனுபவத்துக்கு முன்னதாகவே கிடைக்கும் எளிதான சந்தோஷமாகும்.

கலவி அனுபவம் இல்லாத புத்தம் புதியவர்களுக்கு முழுமையான இன்பமும் திருப்தியும் தரக்கூடியது.

ஆனால், நீண்ட நாள் காதலர்கள் அல்லது ஏற்கெனவே இன்பம் அனுபவித்த கணவன்மனைவிக்கு இந்தத் தழுவுதல் முழுமையான இன்பம் தராது.

ஆனால், காம இச்சையைத் தட்டி எழுப்புவதற்கு இவை போதுமானதாகும்.

கால் விரலால் கால் விரல்களைத் தொடுவது, இடுப்பைக் கிள்ளுவது, மார்பைக் கசக்குதல் போன்றவையும் காம இச்சையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வது ஆகும்.

இரண்டாவது வழி 
தொடுதலுக்கு அடுத்தபடியாக இன்பம் தருவது முத்தம். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்த இடங்களாகும்.

கலவியில் அனுபவம் இல்லாதவர்களுக்குச் சாதாரண முத்தங்களே இன்பத்தை அள்ளித்தரக்கூடியதாக இருக்கும்.

அதாவது, உதட்டின் மீது உதட்டை வைத்து முத்தமிடுதல், ஆணோ அல்லது பெண்ணோ மற்றவருடைய தாடையைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி, உதடுகளில் முத்தமிடுவது, உதட்டை நாக்கால் வருடுவது, உதட்டை பலமாக அழுத்தி உறிஞ்சுவது, உதட்டைக் கவ்விக்கொள்வது எல்லாமே சாதாரண வகை முத்தமாகும்.

ஆண் அல்லது பெண் தூங்கும்போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது.

அதேபோல் வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பவரை காம விளையாட்டுக்கு  அழைப்பதற்கும் முத்தம் சிறந்த வகையில் பயன்படுகிறது.

images எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!  (உடலுறவில் உச்சம்!! – பகுதி-6) எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!  (உடலுறவில் உச்சம்!! – பகுதி-6) images4நாக்கால் முத்தமிடுவதே சிறப்பு முத்தமாகக் கருதப்படுகிறது.

ஒருவர் நாக்கால் அடுத்தவரது   பற்களைத் தொடுவதும், நாக்கை மற்றவர் வாய்க்குள் நுழைத்து, இருவருடைய நாக்குகளும் துழாவுவதும் இந்த வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த வகையிலான முத்தமானது, குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரையிலும் நீடிக்க முடியும்.

நாக்கை வாயின் உள்ளே செலுத்தி சுழற்றுவதன் மூலமே ஆண்-பெண் இருவரும் உச்சநிலையை எட்டிவிட முடியும். நம் நாட்டைவிட வெளிநாடுகளில் இந்த முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆண்-பெண் மிக அதிகம்.

வாயில் வாய்வைத்து முத்தமிடுதலை அன்பை வெளிக்காட்டும் முக்கிய விஷயமாக, சந்தோஷமான தருணமாகவே நினைக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் நாக்குடன் நாக்கு சேரும் உதட்டு முத்தம் இன்னமும் முழுமையான அளவு மக்களைப் போய்ச் சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மூன்றாவது வழி 
முத்தத்துக்கு அடுத்தபடியாக காமத்தைக் கொழுந்துவிட்டு எரியச்செய்வது நகக்குறிகள். விரல் நகங்களால் ஆண் அல்லது பெண்ணின் உடல் உறுப்புகளைக் கீறுவது அல்லது தோலில் அழுந்தும்படியாகப் பதிப்பதே நகக்குறி எனப்படுகிறது.

நீண்ட நேரம் காமத்துக்குக் காத்திருந்த துணை, தாமதமாக வரும் துணையின் மீது நகக்குறி பதிக்க சரியான தருணம் ஆகும்.

அதேபோல், நீண்ட நாள் பயணத்துக்குப் பிறகு அல்லது ஏதாவது பிரச்னைகளால் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு எல்லாம் நகக்குறி காமத்தைத் தூண்டிவிடுவதாக அமைகிறது.

பெரும்பாலும் காம இச்சை அதிகம் கொண்டவர்களே நகக்குறி பதிப்பவர்களாக இருக்கிறார்கள்.

அக்குள், மார்பகம், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை போன்ற இடங்களில்தான் நகக்குறி அதிகமாகப் பதிக்கப்படுகிறது. ஆனாலும் காம இச்சை அதிகமான பிறகு, உடலின் எந்தப் பகுதியிலும் பதிக்கலாம்; இஷ்டப்படி நடந்துகொள்ளலாம்.

நகக்குறியானது, நினைவுச்சின்னமாக ஆண்-பெண்ணால் ரசிக்கப்படுகிறது.

ஒருவரது நினைவானது கலவி முடிந்த பிறகும் நாளெல்லாம் நிலைத்திருக்க இந்த நகக்குறி உதவுகிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம் காம இச்சை பீறிட்டுக் கிளம்பும்.

தனிமையில் அந்த இடங்களைத் தொட்டுப் பார்த்தே சந்தோஷம் அடைபவர்கள் உண்டு. பெண்களின் மார்பகத்தில்தான் பெரும்பாலும் நகக்குறி பதிக்கப்படுகிறது.

ஆண்களுக்குத் தொடைகளில் நகக்குறி பதிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான நகக்குறிகள், அதிக அளவிலான காமத்தைக் குறிக்கக்கூடியது.

தன்னுடைய இணையைக் கலவிக்கு அழைக்கக்கூடியது; தம்பதியரை சொர்க்கலோகத்துக்குச் செல்லவைப்பது.

நான்காவது வழி காதல் விளையாட்டுகள் முடிந்து, காம இச்சை அளவுக்கு மீறிச் செல்லும்போது, ஆணும் பெண்ணும் முத்தமாரிப் பொழியும்போது, கடிப்பதை இருவருமே வழக்கமாகக்கொண்டுள்ளனர்.

ஒருவரை ஒருவர் லேசாகக் கடித்துக்கொள்ளும்போது, அது அவர்களுக்கு வேதனை அளிப்பதில்லை. மாறாக இன்பத்தை அதிகரிக்கிறது.

காமம் உச்சகட்டத்தை அடையும்போது பற்களுக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. நெற்றி, உதடுகள், கன்னங்கள், மார்பு, தொடை போன்ற இடங்கள் எல்லாம் பற்குறி பதிக்க ஏற்ற இடங்களாகும்.

லேசாகக் கடிக்கும்போது எவ்விதமான அறிகுறிகளும் வெளியே தெரிவதில்லை. அழுத்தமாகக் கடிப்பதால், கடிபட்ட இடம் வீங்கிப்போய்விடுவது உண்டு. சில சமயங்களில், அத்தனை பற்களும் வரிசையாக அச்சுப் பதிந்ததுபோல் விழுவது உண்டு.

உடல் முழுவதும் பல இடங்களில் பல மாதிரியாகவும் பற்குறிகள் பதிக்கப்படுவது உண்டு. நகக்குறி மற்றும் பற்குறி இரண்டுமே கிளர்ச்சியடையச் செய்வதற்கு ஏற்றவை.

தனிமையில் இவற்றைப் பார்த்து காம போதை அடைபவர்கள், இணை வந்தவுடன் காமத்தைத் தீர்த்துக்கொள்ளத் தவிப்பார்கள். இதனால், எளிதில் உச்சபட்ச இன்பத்தை அடையமுடிகிறது.

தொடரும்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுமேடையில் முதல் மனைவிக்கு Hug! இரண்டாவது மனைவிக்கு Kiss! ( வீடியோ)
Next post ஹாலிவுட்டில் என்ட்ரி ஆகும் ராதிகா ஆப்தே !! (சினிமா செய்தி)