பெங்களூரு-சென்னை இடையே விரைவு ரயில் பாதை திட்டம் : சீனாவின் உதவியை நாடியது இந்தியா!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 31 Second

சென்னை இடையே விரைவு ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த சீனாவின் உதவியை இந்தியா நாடியுள்ளது. சீனா தலைநகர் பீஜிங்கில் இந்தியா, சீனா இடையே பொருளாதார பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோல், சீனா சார்பில் தேசிய மேம்பாட்டு மற்றும் சீரமைப்பு கமிஷனின் தலைவர் ஹி லிபெங் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா சார்பில், பெங்களூரு-சென்னை இடையே விரைவு ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சீனாவின் உதவி நாடப்பட்டுள்ளதாக ராஜிவ் குமார் தெரிவித்தார். இந்த வழித்தடத்தில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில் பாதையை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலித்து சீனா தனது முடிவை தெரிவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோகம் மறந்து வாய்விட்டு சிரிக்கமகிழ!!(வீடியோ)
Next post வானவில் சந்தை!!(மகளிர் பக்கம்)