8 வீரர்கள் பலி எகிப்து ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்!!( உலக செய்தி)

Read Time:1 Minute, 35 Second

எகிப்தில் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 வீரர்கள் பலியாகினர். பதில் தாக்குதலில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.எகிப்தில் முகமது மோர்சி அதிபராக பதவி வகித்து வந்தார். அவரை கடந்த 2013ல் ராணுவம் பதவியில் இருந்து அகற்றியது. இதையடுத்து, போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று சினாய் பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் வந்தனர்.

அவர்கள் தானியங்கி துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில், 8 வீரர்கள் கொல்லப்பட்டனர். 15 வீரர்கள் காயமடைந்தனர். ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்திய, தீவிரவாதிகள் முகாமுக்குள் நுழைவதை முறியடித்தனர். இந்த தாக்குதலில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் 4 பேரின் உடலில் வெடிகுண்டுகள் கட்டப்பட்டு இருந்தன. முகாமுக்குள் நுழைந்து தற்கொலை தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டு இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: மேனகா காந்தி வலியுறுத்தல்!!(உலக செய்தி)
Next post கல்லூரி முதல்வரான திருநங்கை!!(மகளிர் பக்கம்)