ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்தால், வயது வித்தியாசமின்றி 100 வயதிலும் குழந்தை பெறலாம்

Read Time:2 Minute, 30 Second

30 வயதுக்கு மேல், பெண்களின் குழந்தை பெறும் திறன், படிப்படியாக குறைவதாக தற்போதைய விஞ்ஞானம் சொல்கிறது. ஆனால், இன்னும் 30 ஆண்டுகளில் குழந்தை பிறக்காத தன்மையே இருக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. தோல் செல்களில் இருந்து ஆணின் உயிரணுவையும், பெண்ணின் கருமுட்டையையும் உருவாக்குவதற்கும், அவற்றை ஒன்றாக இணைத்து கருவாக உருவாக்குவதற்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இவற்றை குழந்தையாக வளர்க்க செயற்கை கருப்பை உருவாக்குவதற்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சி பணிகள் முடிவடைய 30 ஆண்டுகள் ஆகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்தால், வயது வித்தியாசமின்றி, 100 வயது மூதாட்டி கூட குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். பிறந்த குழந்தை கூட இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மேலும், பெற்றோர்கள் தங்கள் விருப்பம்போல், கருப்பான தலைமுடி கொண்ட குழந்தைகளையோ, சிவந்த நிறம் கொண்ட, புத்திசாலியான, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகளையோ, `ஆர்டர்’ கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். முதலாவது சோதனை குழாய் குழந்தையான லூசி பிரவுன் 30-வது பிறந்தநாளை இந்த மாதம் கொண்டாடுகிறார். இதையொட்டி, அடுத்த 30 ஆண்டுகளில் மகப்பேறு மருத்துவத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து ஒரு விஞ்ஞான பத்திரிகையில் விஞ்ஞானிகள் வெளியிட்ட கணிப்புகளில்தான், மேற்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குப்பையில் வீசிய சாக்லெட் உறையால் விண்வெளிக்கு செல்லும் வாய்ப்பு
Next post தீவிரவாதிகளை காலவரையின்றி சிறை வைக்க புஷ்சுக்கு அதிகாரம் உண்டு: அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு