ஆபரணங்களுக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டு!!(மருத்துவம்)
‘‘உணவுப் பழக்கவழக்கங்களைப் போலவே, ஆபரணங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. இயற்கையோடு இணைந்த நமது பாரம்பரியத்தில் இந்தஅணிகலன்கள் வெறும் அழகுக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் மட்டுமேயன்றி மருத்துவரீதியாகவும் பயன்படுகிறது’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ராதிகா…
ஆபரணங்களுக்கும் ஆரோக்கியத்துக்கும் அப்படி என்ன தொடர்பு….
உலோகங்கள் ஸ்திரத்தன்மை கொண்டுள்ளதால் அதை பயன்படுத்தும் நமக்கும் அதன் முழுப்பலன் கிடைக்க வழிவகை செய்கிறது. உலோகங்களில் இருக்கும் ரசாயனம் நம் உடலில் கலப்பதன் மூலம் சீரான ரத்த ஓட்டம் மற்றும் வலிமைகளைப் பெற முடியும். இதில் நாம் ஆபரணங்கள் அணியும் இடத்துக்கு ஏற்பவும் பலன்கள் கிடைக்கின்றன.
காதணி
காதணி அணியும் இடத்தில் இருக்கும் நரம்பானது மூளையுடன் தொடர்பு கொண்டது. பிறந்த குழந்தைகளுக்கு காதணி அணியும்போது, அது அவர்களின் மூளையின் செயல்திறனை அதிகரிப்பதோடு, கண்பார்வை திறனையும் மேம்படுத்தும். இதனால்தான் காதணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை விழாக்கள் போன்றே நாம் பின்பற்றி வருகிறோம்.
மூக்குத்தி
மூக்கின் உள்ளிருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்தப் புள்ளிகள் தூண்டப் படும்போது அது சம்பந்தமான நோய்கள் குணமாகும். மாதவிடாய் பிரச்னைகள் கட்டுப்படும்.
கழுத்து ஆபரணங்கள்
கழுத்தில் ஆபரணங்கள் அணிவதனால் உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகிறது. ஏனெனில், கழுத்தில் முக்கிய உணர்வு புள்ளிகள் உள்ளன.
மோதிரம்
உடலின் வெப்பத்தை சமமாக வைக்க விரலில் மோதிரம் அணியும் பழக்கம் உதவுகிறது. மேலும், விரல்களில் இருக்கும் முக்கிய புள்ளிகள் மோதிரம் அணிவதால் பல வகையில் நன்மை பயக்கும்.ஆள் காட்டி விரல் மன தைரியத்தை ஏற்படுத்தும். நடுவிரல் நுரையீரல் மற்றும் சுவாசத்தை சீர்படுத்தும். மோதிர விரல் – இதயம் சம்பந்தப்பட்ட புள்ளிகள் இந்த விரலில் இருப்பதால் இதயத்துக்கு நன்மை உண்டாகும். திருமண விழாக்களில் இதனால்தான் மோதிரம் மாற்றிக் கொள்ளப்படுகிறது. சிறுவிரல் மூளைத்திறன் மேம்படும்.
வளையல்
கை மணிக்கட்டு பகுதியைச் சுற்றிலும் மிக முக்கியமான 5 புள்ளிகள் அமைந்துள்ளன. இவைகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணுக்களின் உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் சீராகிறது. பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் அதிக வளையல்கள் போடுவது இதற்காகத்தான். இதனால் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
கொலுசு
கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனைத் தூண்டிவிடும். கர்ப்பப்பை இறக்க பிரச்னையை தடிமனனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.
மெட்டி
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். பாலின ஹார்மோன்களைத் தூண்டக்கூடிய முக்கிய புள்ளிகள் கால் விரல்களில் உள்ளது. வாந்தி , சோர்வு, மயக்கம் பசியின்மை போன்று கர்ப்ப காலங்களில் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கும்.
அரை நாண் கொடி
உடலின் நடுப்பகுதியான இடுப்பில் அரைநாண் கொடி அணிவிப்பதன் முக்கிய நோக்கமே உடலில் ரத்தத்தின் ஓட்டத்தை சீராக்குவதற்குத்தான். மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் செல்லும் ரத்த ஓட்டம் இதன்மூலம் சீராகவும் சம நிலையுடனும் இருக்கும். அத்துடன் ஆண், பெண் மலட்டுத் தன்மையை நீக்கவும், உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் அரை நாண் கொடி அணியப் படுகிறது. ஒட்டியாணமும் இதற்காகவே அணியப்படுகிறது.
ஆபரணங்கள் அணியும் இடத்தைப் போன்றே, ஆபரணங்களின் தன்மைகளைப் பொறுத்தும் நன்மைகள் உண்டு. அதையும் தெரிந்துகொண்டு பயன்படுத்துவது இன்னும் சிறப்பான பலனைத் தரும்…
தங்கம்
தங்கம் அனைவரும் பயன்படுத்த கூடிய ஓர் உலோகம். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். நரம்பு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் போக்கக் கூடியது. செரிமானத்தை சீர்ப்படுத்தும். மன அழுத்தத்தைக் குறைக்கும். மூளைத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
வெள்ளி
வெள்ளி கிருமி நாசினி என்பதால் அடிபடும்போதோ அல்லது தொற்றுக் களிலிருந்தோ பாதுகாக்கும். மாதவிடாய் பிரச்னைகளைக் குறைக்கும். பித்தத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. நாள்பட்ட காயம் குணமாகும். வாந்தி, சோர்வைப் போக்கக் கூடியது.
பிளாட்டினம்
வெள்ளை உலோகம் என அழைக்கப்படும் பிளாட்டினம் மிக அரிதான ஒன்று. தங்கத்தை விட விலை உயர்ந்தது மட்டு மல்ல; மதிப்பும்மிக்கது. தனித்தன்மை கொண்டது. இது அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடிய உலோகமாகும். புற்றுநோய் போன்ற பிரச்னைகளை குணப்படுத்தக் கூடியது.
வைரம்
வைரத்துக்கு தனித்தன்மை உண்டு. புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற பெரும் நோய்களை குணப்படுத்தும் என நம்பப் படுகிறது. உடலின் வாத, பித்த, சிலேத்துமதோஷங்களை நிவர்த்தி செய்யக் கூடியது. இதனை சந்த தாதுக்கள் என கூறுவார்கள்.
முத்துக்கள்
முத்துகள் உடல் வெப்பத்தை குறைக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். விஷத்தன்மையை முறிக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது. படபடப்பு தன்மையைக் குறைக்கும், நாள்பட்ட நோய் மற்றும் காய்ச்சல்களை தீர்க்கக் கூடியது.
பவளம்
பவளம், முத்தை விட சற்று வெப்பம் அதிகம் கொண்டிருக்கும். தோல் சம்பந்தமான பிரச்னைகளை தீர்க்கக் கூடியது. நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும் வல்லமை கொண்டது.தமிழரின் பாரம்பரியத்தில் நகைகளை கட்டாயப்படுத்தியதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியத்தை முன் நிறுத்தியே என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். அக்காலத்தில் நம் முன்னோர்கள் நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளின் குணமறிந்து பயன்படுத்தினர்.
அதனால்தான் அவர்களால் நோயின்றி வெகுகாலம் வாழ முடிந்தது. ஆதலால், ஆபரணங்களை வெறும் ஆடம்பரம் என மேலோட்டமாக நினைக்காமல் அதன் நன்மைகளை உணர்ந்து நாமும் அவர்களின் வழிகளை பின்பற்றி நடப்பது என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
Average Rating