சூரியனை அருகில் சென்று ஆராய பார்க்கெர் விண்கலம் ஜூலை 31-ல் பாய்கிறது!!( உலக செய்தி)

Read Time:4 Minute, 10 Second

சூரியனின் மேற்பரப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘பார்க்கெர் விண்கலம்’, வரும் ஜூலை 31ம் தேதி, டெல்டா 4 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது சூரியனை பற்றிய ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும் முதல் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களை ஆராய விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களில் ரோவர் கருவிகள் தரையிறக்கப்பட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சூரியனை ஆராய மட்டும் இதுவரை விண்கலங்கள் அனுப்பப்படாமல் இருந்தது. சூரியனின் மேற்பரப்பை ஆராய வேண்டுமானால், அதிகளவிலான வெப்பம் மற்றும் கதிர்வீச்சு தாங்கும் விண்கலங்களை உருவாக்க வேண்டும். இதற்காக தற்போது ‘பார்க்ெகர்’ என்ற விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உருவாக்கியுள்ளது. இந்த விண்கலம் தற்போது விமானப்படை விமானம் மூலம் புளோரிடா கொண்டு செல்லப்பட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த டெல்டா 4 ராக்கெட் மூலம் இந்த விண்கலத்தை வரும் ஜூலை 31ம் தேதி விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட பிறகு, சூரியனின் ஒளி வட்டத்திலிருந்து 98 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டபாதையில் சுற்றி ஆய்வை மேற்கொள்ளும். இதுவரை எந்த விண்கலமும் சூரியனுக்கு இவ்வளவு நெருக்கமாக சென்றதில்லை. மிக அதிகமான வெப்பம் மற்றும் கதிர்வீச்சை தாங்கி கொண்டு இந்த விண்கலம் சூரியக்காற்று பற்றி அடிப்படை அறிவியல் தகவலை தெரியப்படுத்தும்.

இதன் தகவல்கள் சூரிய புயல், விண்வெளி மையம், விண்வெளி வீரர்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் பூமியின் தொழில்நுட்பங்களை பாதிக்கும் விண்வெளி பருவநிலை நிகழ்வுகள் போன்றவற்றை முன்கூட்டியே அறிய உதவும். அதிக வெப்பத்தை தாங்குவதற்கு இந்த விண்கலத்தில் வெப்ப பாதுகாப்பு ஓடுகள் ஒட்டப்பட உள்ளன. இந்த விண்கலத்தில் எரிபொருள் நிரப்பப்படுவதற்கு முன், பல சோதனைகள் அடுத்த சில மாதங்களில் மேற்ெகாள்ளப்படும். இது குறித்து அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இயற்பியல் ஆய்வு மையத்தில் பணியாற்றும் பார்க்ெகர் விண்கல ஆய்வு திட்டத்தின் மேலாளர் ஆண்டி டிரைஸ்மேன் கூறுகையில், ‘‘சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தை நனவாக்க எங்கள் குழுவினர் கடுமையாக பணியாற்றி உள்ளனர். பார்க்ெகர் சூரிய ஆய்வு மூலம் பல முக்கிய தகவல்கள் வெளிவர உள்ளன. பார்க்ெகர் விண்கலத்துக்கு வெப்ப பாதுகாப்பு ஓடுகள் ஒட்டுவதுதான் இறுதியான பணி. அதன்பின் டெல்டா 4 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஜூலை 31ம் தேதி விண்ணுக்கு அனுப்பப்படும்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் பரபரப்பு : அதிபர் டிரம்ப் கட்டிடத்தில் 50-வது மாடியில் தீ விபத்து!!(உலக செய்தி)
Next post மாணவர்களை குறிவைக்கும் புகையிலை நிறுவனங்கள்!!(மருத்துவம்)