குர்ஆனை அர்த்தப்படுத்தும் மத அறிஞர் குழு ஒன்றை அமைக்கவுள்ளது பிரிட்டிஷ் அரசு

Read Time:1 Minute, 30 Second

பிரிட்டிஷ் அரசு, இஸ்லாமிய கடும்போக்கு மதவாதிகள் என்று தாம் கருதும் ஆட்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் போக்கை கட்டுப்படுத்தும் நோக்கத்திலான செயல்திட்டங்களை முன்வைத்துள்ளது. முஸ்லீம் மத அறிஞர்கள் அடங்கிய குழு ஒன்றை அது அமைக்கவிருக்கிறது. குரானை எப்படி விளங்கப் படுத்த வேண்டும் என்பது குறித்தும், முக்கிய விவ காரங்களில் விவாதப்போக்கை ஊக்கப்படுத்தும் நோக்கத்திலும் இந்த குழு செயற்படும். ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊழியர்களைக்கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்த குழு, சுயாதீனமாக செயற்படும் என்று அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். நவீன மதசார்பற்ற சமுதாயத்தில் பிரிட்டிஷ் குடிமகனாக வாழ்வதற்கு முஸ்லீம் மத நம்பிக்கை ஒத்திசைவாக இருக்கும் என்பதை சிறார்களுக்கு உணர்த்துவதற்கு இஸ்லாமிய மத பள்ளிகளுக்கு இந்த குழு உதவும் என்பது இதன் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 90ஆவது பிறந்தநாள் கொண்டாடிய நெல்சன் மண்டேலா
Next post இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு ஜப்பான் 500 மில்லியன் பெறுமதியான உணவுப் பொருட்கள்