அமெரிக்கா கப்பல்கள் ரோந்தை தொடர்ந்து தென்சீனாவில் 40 போர்க்கப்பல்கள் பயிற்சி!!(உலக செய்தி)

Read Time:2 Minute, 8 Second

தென் சீனா கடல் பகுதியில் 40க்கும் மேற்பட்ட கப்பல்கள் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூரவ வீடியோவை சீனாவே வெளியிட்டுள்ளது. தென் சீனக் கடல் பகுதியை சீனா உரிமை கொண்டாடி வரும் வேளையில், அங்கு தடையை மீறி அமெரிக்க போர்க்கப்பல்கள் அடிக்கடி வலம் வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்சீன கடலோர பகுதிகளில் அமெரிக்காவை சேர்ந்த 3விமான தாங்கி போர்க்கப்பல்கள் வலம் வந்தன. இதனை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன கப்பல் படை 40 க்கும் மேற்பட்ட போர் கப்பல்களை வைத்து போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது.

இந்த பயிற்சியில் அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்,ரஷ்யாவின் புதுப்பிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான லியோனிங் ஆகியவை முதன்முதலாக போர்ப் பயிற்சியில் பங்குபெற்றன. சர்வதேச நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு தென் சீனா கடற்பகுதி அனைவருக்கும் பொதுவானது என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வியட்நாம்,பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் புரூனி ஆகிய நாடுகளுக்கு தென்சீன கடற்பகுதியில் உரிமை உள்ளதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. ஆனால் சீனா இதனை ஏற்றுக்கொள்ளாமல் தென்சீனா கடற்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா இடையே பரபரப்பு நிலை வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிண்டல் கேலிகளுக்கு ரஜினி பதில்… !!(வீடியோ)
Next post கைதி எண் 106 – சிறையில் அடைக்கப்பட்ட சல்மான் !!(சினிமா செய்தி)