இந்திய மருந்து இறக்குமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை

Read Time:1 Minute, 42 Second

இந்திய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் தயாராகும் மருந்துகளை இறக்குமதி செய்யக்கூடாது என பிரதமர் யூசுப் ராஸô கிலானி அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது பாகிஸ்தானில் தயாரிக்கப்படாத 13 தடுப்பு மருந்துகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு விளக்கம் அளிக்குமாறும் கிலானி கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து 400 வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்படவிருந்த தகவலை வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் உள்ளூர் மருந்துத் தயாரிப்பாளர்களிடம் கசிய விட்டுள்ளது. இதையடுத்து, உள்ளூர் மருந்துத் தயாரிப்பாளர்கள் தங்களது அனைத்து “தொடர்புகளையும்’ பயன்படுத்தி இறக்குமதியைத் தடுத்துவிட்டனர். இந்தியாவில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்தால், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் எனவும், ஆண்டுதோறும் சுமார் ரூ.500 கோடிக்கு ஏற்றுமதி பாதிக்கப்படும் எனவும் உள்ளூர் வர்த்தகர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தானில் மருந்துத் தொழிலில் மட்டும் ரூ.8300 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Progress of Wanni theatre of operations..
Next post லண்டனில் வன்முறையில் ஈடுபட்டதாக 6 இலங்கை தமிழர்கள் மற்றும் இந்தியர் ஒருவர் கைது