பி.கே.கே., குர்திஸ் அமைப்பிடமிருந்து புலிகளுக்கு நவீன ஆயுதங்கள்!
சர்வதேச பயங்கரவாத அமைப்புகளாகத் தீர்மானிக்கப்பட்டு ஐக்கிய அமெரிக்க அரசால் முதலிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட ஏனைய முன்னணி நாடுகளால் பின்னரும் சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளிடையே பரஸ்பரம் அவைகளின் பயங்கரவாதச் செயற்பாடுகள் போராட்ட முறைகள், ஆயுதப் பரிமாற்றங்கள் போன்ற தொடர்புகள் இருப்பதாக இதுவரைபல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வற்றுள் முக்கியமாக ஸ்ரீலங்காவில் இயங்கும் புலிகள் இயக்கத்துக்கும் அல்ஹைடா, ஹிஸ்புல்லா, ஹமாஸ், தலிபான் ஆகிய அமைப்புகளுக்குமிடையே அவ்வாறான தொடர்புகள் இருப்பதாகவும் குறிப்பாக புலிகள் இயக்கம் அல்ஹைடா, தலிபான் ஆகிய அமைப்பைச்சேர்ந்த பிரிவினர்களிடமிருந்து ஆயுதங்களை வாங்கியதாகவும் தகவல்களை வெளிநாட்டு ஊடகங்களும் அதனை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்தவகையில் தற்போது புலிகள் இயக்கத்துக்கும் குர்திஸ் இனத்தவரின் பி.கே.கே.அமைப்புக்குமிடையே ஆயுதப்பரிமாறல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பி.கே.கே.இயக்கம் என்பது வடக்கே துருக்கிக்கும் தெற்கே ஈராக்கிற்கும் இடைப்பட்ட எல்லைப்பிரதேசங்களில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் “குர்திஸ்’ எனப்படும் இனத்தவர்களின் அமைப்பாகும். குர்திஸ்தான் என்னும் தனிநாடு அமைப்பதற்காக ஆயுதப்போராட்டத்தை நடத்திவரும் அந்தக்”குர்திஸ்’ இனமக்களின் தீவிரவாத அமைப்பே பி.கே.கே.என்பதாகும். இவர்கள் தனிநாடு அமைக்கப்போராடும் பிரதேசங்கள் துருக்கி நாட்டிற்கு சொந்தமான தெற்குப் பகுதியாக இருப்பதால் இந்த வகையில் துருக்கிப் படையினரும் பி.கே.கே.குர்திஸ் இனத்தவருக்குமிடையே நெடுங்காலமாக மோதல்கள் நிகழ்ந்துவருகின்றன.
அண்மையில் துருக்கி இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் யசார் புயுகனிற் பி.கே.கே.அமைப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்புகள் பற்றித் தெரிவித்திருக்கும் தகவல்களில், பி.கே.கே.பயங்கரவாதிகளுக்கும் ஏனைய பயங்கரவாத அமைப்புகளுக்குமிடையே ஆயுதப்பரிமாற்றங்கள் மற்றும் செயற்பாடுகளில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் இந்தவகையில் அண்மையில் பி.கே.கே.அமைப்பு ஸ்ரீலங்காவில் செயற்படும் பயங்கரவாத அமைப்பாகிய எல்.ரி.ரி.ஈ. அமைப்பினருக்கு முக்கியமான ஆயுதங்களைப் பெருந்தொகையில் வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தகவல்கள் பொறுப்புள்ள தகவல் வட்டாரங்களிலிருந்து கிடைத்திருப்பதாகவும் இதனால் இவ்வாறு பி.கே.கே.பயங்கரவாதிகள் எல்.ரி.ரி.ஈ.பயங்ரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியிருப்பது பற்றி அந்தத் தகவலைப் பகிரங்கமாகவும் உறுதியாகவும் தெரிவிப்பதாகவும் துருக்கி இராணுவத்தலைவர் யாசார் புயுசுனிற் கூறியுள்ளார்.
குர்திஸ் இனத்தவர்களின் பி.கே.கே.அமைப்பின் படை முகாம்கள் ஈராக்கிற்கும் துருக்கிக்கும் இடையே எல்லைப்பிரதேசங்களில் அமைந்துள்ளன. பி.கே.கே.படையினை மேற்படி எல்லைப்பிரதேச நகரில் நிரந்தரமாகவும் உறுதியாகவும் நிலைகொண்டு தாக்குதல்களை நடத்தும் அளவுக்கு, ஆயுதபலம் வாய்ந்த அமைப்பாக உருவெடுத்துள்ளது. ஈராக் ஊடாகவும் மற்றும் அண்டிய நாடுகளின் எல்லைப்பிரதேசங்கள் ஊடாகவும் பி.கே.கே.அமைப்பினருக்கு நவீன ஆயுதங்கள் பெருந்தொகையில் கிடைத்துவருவதாகவும் இவ்வாறு கிடைத்துளள நவீன ஆயுதங்களை ஒரு பகுதியையே பி.கே.கே.அமைப்பினர் ஸ்ரீலங்கா எல்.ரி.ரி.ஈ.அமைப்புக்குக் கொடுத்திருப்பதாக மேலும் துருக்கி இராணுவத்தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தவகையில் எல்.ரி.ரி.ஈ.பயங்கரவாத தலைவர் பிரபாகரன் மற்றும் அவருடைய சர்வதேச ஆயுதக் கடத்தல் தலைவர்களுக்கும் பி.கே.கே.தலைவர்களுக்கு மிடையே அண்மையில் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையில் பி.கே.கே.அமைப்பின் தலைவரினால் எல்.ரி.ரி.ஈ.அமைப்புக்கு முக்கிய நவீன ஆயுதங்கள் அண்மையில் வழங்கப்பட்டதாகவும் துருக்கி இராணுவத்துக்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் துருக்கியின் இராணுவத்தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது பி.கே.கே.அமைப்பிடமிருந்து ஆயுதங்களை வாங்கியுள்ள எல்.ரி.ரி.ஈ.அமைப்பு போலவே பி.கே.கே.குர்திஸ் அமைப்பும் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகத் தீர்மானிக்கப்பட்டு ஐக்கிய அமெரிக்கா மற்றும் பயங்கரவாதத்துக்கெதிரான நாடுகளால் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பாகும்.
தற்போது துருக்கி இராணுவத்தலைவர் யசார் புயுகனிற் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள இத் தகவல்கள் கருத்துகளுக்கு முக்கிய இடம் கொடுத்து துருக்கி நாட்டு ஊடகங்கள் உட்பட முக்கிய வெளிநாட்டு ஊடகங்கள் முக்கிய செய்திகளை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி இராணுவத்தளபதி பொறுப்புடன் இந்தத்தகவலை வெளியிடுவதாகக் கூறியிருக்கும் நிலையிலும், மேலும் அல்ஹைடா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் பி.கே.கே.குர்திஸ் அமைப்பும் புலிகள் அமைப்பும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாக வெளிநாட்டு மற்றும் உள்ளூர் ஊடகங்களில் தகவல்களில் வெளியாகியுள்ள நிலையிலும் பி.கே.கே.அமைப்புக்கு புலிகள் அமைப்புமிடையேயும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதும், பி.கே.கே.அமைப்பினர் புலிகள் இயக்கத்திற்கு அண்மையில் ஆயுதங்களை வழங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுவதும் எதிர்பார்க்கக்கூடியதும் நம்பகரமானதுமே ஆகும்.
Average Rating