டிராக்டர் விபத்து – 12 விவசாயிகள் பலி !!

Read Time:1 Minute, 22 Second

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் இன்று விவசாய கூலித் தொழிலாளர்கள் சுமார் 30 பேர் டிராக்டர் டிரெய்லரில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தனர். வட்டிபட்லா கிராமத்தின் அருகே சென்றபோது, டிராக்டர் நிலைதடுமாறி சாலையோர கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தொழிலாளர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

உயிரிழந்த அனைவரும் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் படாமதி தண்டா கிராமத்தில் இருந்து புலிசேர்லா கிராமத்திற்கு வேலைக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 08 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 73 வயது வயோதிபர்!!
Next post மருத்துவமனையில் திடீர் தீ – நோயாளிகள் உயிர் தப்பினர்?