டிப்ஸ்… டிப்ஸ்…!!(மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 29 Second

சருமம் மென்மை பெற

மஞ்சளை பன்னீர் விட்டு நைசாக அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால், உடலில் வேண்டாத இடங்களில் உள்ள ரோமங்கள் அகன்று, சருமம் மென்மையாகும்.

முக வறட்சி அகல

ஐஸ் கட்டியை தூள் செய்து, ஒரு மெல்லிய துணியில் ைவத்து கட்டி, முகத்திற்கு ஒத்தடம் கொடுப்பதுபோல செய்தால் முகம் நல்ல நிறம் பெறும். கோடை வெயில் காரணமாக முகச்சருமத்தில் தோன்றும் வறட்சி அகலும்.

தலைமுடி கறுப்பாக

அதிகாலையில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறில், இரண்டு துளி தேன் விட்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நரை அகன்று முடி கறுப்பாக வளரும்.

கண் இமை அழகு பெற

கண்களை லேசாக மூடிக்கொண்டு கண் இமைகளில் பன்னீரை ஒரு பஞ்சினால் தொட்டு அடிக்கடி தேய்த்துவிட்டால் கண் இமைகள் கவர்ச்சிகரமான நிறம் பெற்று அழகாக இருக்கும்.

முகச்சுருக்கம் அகல

பசும்பாலில் சிறிதளவு கிளிசரின் கலந்து இரவு படுக்கச் செல்வதற்குமுன் முகத்தை கழுவி வந்தால் முகச்சுருக்கம் அகலும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கவலையளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்!!
Next post தமிழ் நாட்டை ஆள தமிழனுக்கு தகுதி இல்லையா? – சீமான் கேள்வி !!(வீடியோ)