இயக்குனரை வெளுத்து வாங்கிய நடிகை!!(சினிமா செய்தி)

Read Time:2 Minute, 20 Second

சென்ற ஆண்டு கோலிவுட் பாடகி சுசித்ரா பெயரில் சுசிலீக் என்ற இணைய தள பக்கத்தில் பிரபல ஹீரோக்களைபற்றி தாறுமாறாக புகார்கள் கூறப்பட்டன. தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசிலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அதே பாணியில் டோலிவுட் நடிகை ஸ்ரீரெட்டி சில தினங்களுக்கு முன் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்த பிரபலங்களைப் பற்றி விரைவில் தெரிவிப்பேன் என்றதுடன் அது குறித்து ஆதாரங்களை சேனல் ஒன்றில் தந்திருப்பதாகவும், அந்த பெயர்களுடன் அவர்கள் வெளியிட மறுத்ததால் தேசிய ஊடகத்தில் அதனை தருவேன் என்றும் எச்சரித்து திடுக்கிட வைத்தார்.

இதனால் அவரிடம் தவறாக நடக்க முயன்ற பிரபலங்கள் திகில் அடைந்தனர். இந்நிலையில் ஸ்ரீரெட்டி இயக்குனர் ஒருவரை பெயர் குறிப்பிடாமல் விளாசியிருக்கிறார். பெரிய டைரக்டர் என்று பெயர்… வாய்ப்பு கேட்டுபோனால் விசுவாசமாக பேசுவது.. சத்யம் செய்துவிட்டு பிறகு அதை நிறைவேற்றாமல் வேறுயாருக்காவது வாய்ப்பு தருவது.. வீடியோ காலில் பேசுவது… ஆண் நடிகர் என்றால் அவர்களிடம் காசு கேட்பது..’ என்று சரமாரியாக கூறியிருப்பதுடன் ஆபாச வார்த்தையில் திட்டி தீர்த்திருக்கிறார். டோலிவுட் இயக்குனர் சேகர் கமுலாவைத்தான் ஸ்ரீரெட்டி குறிப்பிட்டு தாக்கியிருப்பதாக இணைய தள பக்கங்களில் தகவல் வருகிறது. ஆனால் இதுபற்றி இயக்குனர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷூட்டிங் இல்லாததால் கிராமத்தில் பொழுதை கழிக்கும் ஹீரோயின் !!(சினிமா செய்தி)
Next post காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்காக 2,25,000 ஆணுறைகள் தயார்!!(உலக செய்தி)