டோனி படத்தில் நடித்த நடிகை புலம்பல்!!(சினிமா செய்தி)

Read Time:2 Minute, 50 Second

இந்திய கிரிக்கெட் அணி மாஜி கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு கடந்த 2016ம் ஆண்டு திரைக்கு வந்தது. டோனி வேடத்தில் சுசாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்தார். கதாநாயகியாக திஷா பதானி நடித்தார். படத்தில் இவர் டோனியின் கேர்ள்பிரண்டாக நடித்திருந்தார். தற்போது பாகி 2 படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் வாய்ப்புக்காக தான் தவித்த தவிப்புபற்றி திஷா பதானி கூறியதாவது: திரையுலகை சேர்ந்த குடும்பத்திலிருந்து நான் வரவில்லை. படத்தில் நடித்தால் அது வெற்றி பெறுமா? தொடர்ந்து வாய்ப்புகள் வருமா? என்பதும் எனக்கு தெரியாது.

எனவே மிகவும் ஜாக்கிரதையாக இருந்தேன். எனக்கு நடிப்பு பிடிக்கும். வாய்ப்புக்காக காத்திருந்தேன். முதல்பட வாய்ப்பு கிடைத்தபோது சந்தோஷம் அடைந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு வேறு நடிகையால் பறிபோய்விட்டது. எல்லாமே ஒரு காரணத்துக்காக நடக்கிறது என்று பொறுத்துக்கொண்டேன். புறந்தள்ளுவதுதான் ஒருவரை உறுதிமிக்கவராக்குகிறது. அதுபோல்தான் நான் மனஉறுதி அடைந்தேன். நம்மிடம் ஏதோ குறை இருக்கிறது என்று எண்ணும்போதுதான் அதை நிவர்த்தி செய்து கடுமையாக உழைப்பதற்கான உத்வேகம் கிடைக்கிறது.

நான் ரொம்பவும் பாசிடிவான எண்ணம் கொண்டவள். நடிப்பதற்காக படிப்பை விட்டுவிட்டு வந்தேன். மும்பை வந்தபோது கையில் வெறும் 500 ரூபாய் மட்டுமே இருந்தது. டி.வி கமர்ஷியல் விளம்பரங்களில் நடிப்பேன். வேலை கிடைக்காவிட்டால் அடுத்த மாத வாடகை தருவது திண்டாட்டமாகிவிடும். வேலை செய்வது மட்டுமே எனது வாழ்க்கையாக இருந்தது. வேலை செய்யாமலிருந்தால் எனக்கு வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்துவிடும். கடந்த ஆண்டு ஜாக்கிசான் நடித்த ‘குங்ஃபு யோகா’ படத்தில் நடித்தேன். தற்போது இந்தியில், ‘பாகி 2’ம் பாகத்தில் நடிக்கிறேன். இவ்வாறு திஷா பதானி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் ஆபத்து…! (மருத்துவம்)
Next post வேலைக்கு போகும் இளம்பெண்கள் என்ன ஆடை உடுத்துவது? (மகளிர் பக்கம்)