அமெரிக்காவில் யூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு : தாக்குதல் நடத்திய பெண் தற்கொலை….3 பேர் படுகாயம்!!

Read Time:1 Minute, 15 Second

அமெரிக்காவில் உள்ள யூடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள யூடியூப் தலைமை அலுவலகத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. பெண் ஒருவர் பணியாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

திடீரென நடைபெற்ற இந்த தாக்குதலால் பணியாளர்கள் அலறியடித்து அலுவலகத்தை விட்டு வெளியே ஓடினர். துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் இது குறித்து பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்றாழையின் மருத்துவ முக்கியத்துவங்கள்!!(மருத்துவம்)
Next post வெயில் எனக்கு பிடிக்கும்!!(மகளிர் பக்கம்)