கிளர்ச்சியாளர்கள் வெளியேறியதால் கிழக்கு கவுட்டாவுக்கு திரும்பிய 40,000 மக்கள்!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 49 Second

சிரியாவில் கடந்த 2 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் ஏராளமான அப்பாவி மக்கள், குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது கிழக்கு கவுட்டா பகுதி முழுவதும் கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்கியது. இதனையடுத்து அங்கிருந்த மக்கள் ஏராளமானோர் வெளியேற்றப்பட்டனர். இதன்பின் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த இடங்களில் 95 சதவீத இடங்களை அதிபர் படைகள் மீட்டு விட்டன. அந்தப் பகுதியின் கடைசி இடமான டூமாவில் இருந்து கிளர்ச்சியாளர்களை பின்வாங்கச்செய்வதற்கு, அரசுக்கும், அவர்களுக்கும் இடையே ரஷியா சமரசம் செய்து வைத்தது.

அதன் பலனாக அங்கு இருந்து 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் வெளியேறினர். இதுவரை அங்கிருந்து 2 ஆயிரத்து 269 கிளர்ச்சியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் வெளியேறி உள்ளனர். இந்த நிலையில் போர் காரணமாக அங்கு இருந்து வெளியேறிய உள்ளூர் மக்கள் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கிழக்கு கவுட்டாவுக்கு திரும்பி உள்ளனர். இந்த தகவலை ரஷிய ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரேயாவின் முழு நிர்வாண வைரலாகும் புகைப்படம்!!(சினிமா செய்தி)
Next post பிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை!!(கட்டுரை)