இந்தோனேசியாவின் போர்னியோ தீவு துறைமுகத்தில் அவசர நிலை பிரகடனம்!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 43 Second

இந்தோனேசியாவின் ஜகார்தா கடல் பகுதியில் உள்ள போர்னியோ தீவு அருகே கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தோனேசியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் மூன்றாவது நாளாகப் போராடி வருகின்றனர். எண்ணெய்க் கசிவு மற்றும் புகை மண்டலத்தால், பாலிக்பாப்பன் நகர மக்களுக்கு கடும் முன்னெச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

தீயைப் பரப்பும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எண்ணெய்க் கசிவு மற்றும் தீ விபத்து பாதிப்புகளை குறைந்தபட்சமாக்கவும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதைக் குறைக்கவும் அதிகாரிகள் போராடி வருகின்றனர். இதன்மூலம் ஏற்பட்ட புகைமண்டலத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உடல் நலம் பாபதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கிலோமீட்டர் அளவுக்கு பரவியுள்ள தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்தோனேசிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீமான் பேட்டி – வைகோ வுக்கு பதில்!!(வீடியோ)
Next post இணை தேர்வு வழிமுறை!!(அவ்வப்போது கிளாமர்)