தமிழில் மீண்டும் நடிப்பாரா நஸ்ரியா?(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 52 Second

நேரம், நய்யாண்டி, ராஜா ராணி, வாய் மூடி பேசவும், திருமணம் எனும் நிக்ஹா என ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நஸ்ரியா நாசிம். மலையாள நடிகர் பஹத் பாசிலை மணந்துகொண்டு நடிப்பிலிருந்து விலகினார். மீண்டும் படங்களில் நடிக்க அழைப்பு வந்தபோதும் ஏற்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது சினிமாவில் மற்றொரு துறைக்குள் நுழைந்திருக்கிறார் நஸ்ரியா.

கணவர் பஹத் பாசில் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். தான் தயாரிக்கும் படத்தில் கணவரே ஹீரோவாக நடித்தபோதும் அவருடன் நஸ்ரியா நடிக்கவில்லை. பஹத் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். அதேசமயம் பிருத்விராஜ் நடிக்கும் புதியபடத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படம் மூலம் அவர் ரீஎன்ட்ரியானாலும் இதுவரை படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை.

இப்படம் மலையாளத்தில் உருவாகிறது. 2014ம் ஆண்டு, ‘திருமணம் எனும் நிக்ஹா’ படம்தான் நஸ்ரியா நடிப்பில் கடைசியாக தமிழில் திரைக்கு வந்தபடம். அதன்பிறகு பஹத்பாசிலை மணந்துகொண்டு செட்டிலானவர் மீண்டும் தமிழ் படங்கள் பக்கம் தலைகாட்டவில்லை. வாய்ப்புகள் வந்தாலும் அவர் தமிழ் படத்தில் நடிப்பது சந்தேகமே என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செவ்வாய் கிரகத்தில் விலங்குகள் – அதிர்ச்சி புகைப்படம் !!( உலக செய்தி)
Next post ஒரே நபருக்கு பல்வேறு பிரிவின் கீழ் எச்1பி விசா கேட்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் : அமெரிக்கா எச்சரிக்கை!!