ஆப்கான் விமானப்படை தாக்குதல் : 30 தாலிபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததாக அரசு தகவல்!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 33 Second

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய விமானப்படை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. குந்தூஸ் மாகாணத்தில் தாலிபான் இயக்கத்தினர் அணிவகுப்பு நடத்தப் போவதாக அரசுப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் விமானப்படையினர் சம்பவ இடத்தை குண்டு வீசித் தாக்கினர். இந்தத் தாக்குதலில் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

அரசு நடத்திய இந்த தாக்குதலில் அங்கிருந்த மசூதி சேதமடைந்ததாகவும், பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் கூறினர். மதநல்லிணக்கப் பள்ளி மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் அமெரிக்கப் படைகள் ஈடுபடவில்லை என்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமலின் குற்றச்சாட்டுக்கு ரஜினியின் அதிரடி பதில் !!( வீடியோ)
Next post இயற்கை குளியல்!!(மகளிர் பக்கம்)